நடுவழியில் தீப்பிடித்துக் கொண்ட பிரான்சின் அதிவேகத் தொடருந்து (TGV)!

Read Time:1 Minute, 31 Second

tgvMarseille யிற்கும் Bordeaux விற்கும் இடையில் பிரயாணம் செய்யும் அதிவேகத் தொடருந்தான TGV இன்று சனிக்கிழமை காலை வழியில் தீப்பிடித்துக் கொண்டது. இருப்பினும் அதிஸ்டவசமாக யாரும் காயத்திற்குள்ளாகவில்லை. 220 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தொடருந்து பிரான்சின் தெற்கு நகரமான Tarascon இற்கு அருகில் வரும போது புகைக்கத் தொடங்கியதுடன் தீயும் பிடிக்கத் தொடங்கியது. தீப்பிடிக்த் தொடங்கிய முதல் மூன்று பெட்டிகளிலிருந்தும் பயணிகள் பின் நகர்த்தப்பட்டனர். உடனடியாகத் தீயணைப்புப் படை வீரர்கள் Manduel நகருக்காமையில் விரைந்து வந்து தீயை அணைத்ததால் விபத்துத் தவிர்க்கப்பட்டது. அங்கிருந்து கட்டியிழுக்கப்பட்ட தொடருந்து Nimes வரை கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து பயணிகள் வேறு தொடருந்துகளில் அனுப்பப்பட்டனர். இதே வழித்தடத்தில் பயணிக்கும் பத்திற்கும் மேற்பட்ட தொடருந்துகள் பெரும் தாமதங்களை எதிர் நோக்கின. தீக்கான காரணம் இன்னமும் அறியத்தரப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈராக் கார்க் குண்டு தாக்குதலில் 30 பேர் பலி: அவசர நிலை பிரகடனம்
Next post சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என அரசாங்கம் அறிவிப்பு