இன்றைய ராசிபலன்: 03.02.2013

Read Time:3 Minute, 56 Second

Raasipalan-001
மேஷம்
நட்பால் நல்ல காரியமொன்று நடைபெறும் நாள். வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரும். புண்ணிய காரியம் செய்யும் எண்ணம் உருவாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணையலாம்.

ரிஷபம்
பாக்கிகள் வசூலாகி பணவரவைக் கூட்டும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள்.

மிதுனம்
நினைத்தது நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். பூர்வீகசொத்து தகராறுகள் நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

கடகம்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். உங்கள் கருத்துக்களை கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வாகன பராமரிப்புச் செலவுகள் உருவாகும்.

சிம்மம்
கனிவானப் பேச்சுக்களால் காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். சகோதர வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும். கனவு பலிதம் உண்டு. பொது வாழ்வில் உருவான வீண்பழிகள் அகலும்.

கன்னி
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். இல்லத்தில் நல்ல காரியம் நடப்பதற்கான அறிகுறி தோன்றும். பொருளாதார முன்னேற்றம் உருவாகும்.

துலாம்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காணவேண்டிய நாள், அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பழைய நல்ல சம்பவங்களை அசை போட்டு பார்ப்பீர்கள். திடீர் பயணங்கள் உருவாகலாம்.

விருச்சகம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணம் மேலோங்கும். எதிர்பாராத திடீர் சந்திப்புகள் ஏற்படும்.

தனுசு
யோகமான நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்க அஸ்திவாரமிடுவீர்கள். மனதில் பசுமையான எண்ணங்கள் தோன்றிக்கொண்டேயிருக்கும்.

மகரம்
எண்ணங்கள் எளிதில் நிறை வேறும் நாள். புதிய தொழில் தொடங்க தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். வீட்டை அலங்கரிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும்.

கும்பம்
புத்திசாலித்தனமான செயல் பாடுகளால் புதுமைகள் படைக்கும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே நடைபெறும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து உற்சாகமடைவீர்கள்.

மீனம்
காரிய வெற்றிக்கு கடவுளை வழி பட வேண்டிய நாள். வீண் பிடிவாதங்களைத் தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் பங்கு தாரர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் ஏற்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவ்வப்போது கிளாமர் படங்கள்..
Next post வெளிநாட்டு சிகரட்களுடன் இருவர் புத்தளத்தில் கைது