இந்தியா ஆதரவளிக்குமென அமெரிக்கா நம்பிக்கை

Read Time:1 Minute, 41 Second

usa-slk-002ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரவூள்ள புதிய பிரேரணைக்கு இந்தியா பூரண ஆதரவளிக்கும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கை சென்றுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர்மட்ட அதிகாரிகள் கொழும்பில் இதனைத் தெரிவித்துள்ளனர். கொழும்பில் ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் ஜேம்ஸ் மூர், இந்தத் தீர்மானம் நேரடியான நடைமுறைத் தீர்மானமாக இருக்கும், அத்துடன் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக் கோரும் 2012ம் ஆண்டு தீர்மானத்தை இது அடிப்படையாக கொண்டிருக்கும் என சுட்டிக் காட்டியூள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட மக்களுக்கான தனது கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு இத் தீர்மானம் மூலம் இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்படும். கடந்த ஆண்டு தீர்மானத்தை ஆதரித்த இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக நிற்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய ராசிபலன்கள்:01.02.2013
Next post விஸ்வரூபம் இன்று வட இந்தியா முழுவதும் வெளியீடு