வவூனியா முதல் யாழ்வரை 30 படைமுகாம்கள்

Read Time:2 Minute, 35 Second

tna.srimp_army_02ஏ9 பிரதான வீதியில், வவூனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் 30 படைத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரிய படைமுகாம்களும் உள்ளடங்குகின்றன. பூநகரிப் பிரதேசத்தில் மாத்திரம் 30 ஆயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். பூநகரிப் பிரதேசத்தில் மாத்திரம் 806 ஏக்கர் நிலப்பரப்பில் 10 படைமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 30ஆயிரம் படையினர்வரை நிலைகொண்டுள்ளனர். இதனைவிட ஏ9 வீதியில் வவூனியாவிலிருந்து யாழ் வரையான பகுதியில் 30 படைமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வவூனியாவில் சென்.ஜோசப் படை முகாம், மாந்தை படைமுகாம், தாண்டிக்குளத்தில் 56 ஆவது ரெஜிமென்ட், புளியங்குளத்தில் விசேட படைப்பிரிவூ, குருசிடம்குளத்தில் விசேட படைப்பிரிவூ, கனகராயன்குளத்தில் 19 ஆவது கஜபாகு ரெஜிமென்ட், கனகராயன்குளத்தில் 561 ஆவது ரெஜிமென்ட், கனகராயன்குளத்தில் 19 ஆவது இலங்கை படைப்பிரிவூ, பெரியகுளத்தில் விசேட படைப் பிரிவூ, மாங்குளதில் 574 ஆவது ரெஜிமென்ட், மாங்குளத்தில் 53 ஆவது ரெஜிமென்ட், கொக்காவிலில் 632 ஆவது ரெஜிமென்ட், அறிவியல்நகரில் விசேட படைப்பிரிவூ, இரணைமடுவில் தகவல் படைப்பிரிவூ, கிளிநொச்சியில் 571ஆவது ரெஜிமென்ட், ஆனையிறவூ, மாஞ்சோலை, புலோப்பளை, பளை, முகமாலை, எழுதுமட்டுவாள், வரணி, நுணாவில், நணாவில் மத்தியில் படைத்தளங்களும், மிருசுவிலில் கெமுனுபடைப்பிரிவூம், கைதடியில் 3 ஆவது ரெஜிமென்ட், கைதடியில் 52 ஆவது படைப்பிரிவூ, கைதடியில் 523 ஆவது படைத் தலைமையகமும் அமைந்துள்ளன பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

tna.srimp_army_02

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் கைது
Next post மாணவியை துஷ்பிரயோகிக்க முயற்சித்த பாடசாலை சிற்றூழியர் கைது