இன்றைய‌ ராசிபலன்கள்:31.01.2013!!

Read Time:4 Minute, 4 Second

Raasipalan-001
மேஷம்
முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்த கடன் பிரச்சினையை சாமார்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். ஆரோக்யம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.

ரிஷபம்
வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். மனதில் இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்ளும். குழந்தைகள் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்வீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முற்படுவீர்கள்.

மிதுனம்
மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிக்கும் நாள். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் எண்ணம் மேலோங்கும்.

கடகம்
உறவு பகை பாராமல் உதவி செய்யும் நாள். தொழில் முயற்சி வெற்றி பெறும். சுபச் செய்திகள் வந்து சேரலாம். அரசியல்வாதிகளின் சந்திப்பு கிட்டும். குரு வழிபாடு குதூகலம் வழங்கும்.

சிம்மம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தன்னம்பிக்கையோடு பணி புரிவீர்கள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பால் பொருள் வரவிற்கு வழித்தேடிக் கொள்வீர்கள். குடும்பத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு கூடும்.

கன்னி
இடமாற்றங்களால் இனிய மாற்றம் ஏற்படும் நாள். கல்வி நலன் கருதி எடுத்த முயற்சியில் ஏற்பட்ட தடைகள் அகலும். ஆரோக்யம் சீராக ஒரு சிறு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உருவாகும்.

துலாம்
பயணங்கள் அதிகரிக்கும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வது நல்லது. விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் தேவை.

விருச்சகம்
எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வந்து சேரும் நாள். தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். அந்நியதேச அனுகூலம் ஏற்படும்.

தனுசு
சுறுசுறுப்பாகச் செயல்படும் நாள். செய்தொழிலில் சிறப்புகள் வந்து சேரும். விரும்பிய காரியமொன்றை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். வீடு, மனை வாங்க போட்ட திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள்.

மகரம்
நன்மைகள் நடைபெறும் நாள். உள்ளன்போடு பழகியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பாதியில் நின்ற பணிகளை இன்று மீதியும் செய்து முடிப்பீர்கள்.

கும்பம்
அல்லல்கள் தீர அங்காரகனை வழிபட வேண்டிய நாள். எந்தக் காரியத்தையும், ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. பிள்ளைகளால் சிறு விரயம் ஏற்படலாம். குடும்ப சுமை கூடும்.

மீனம்
செவி குளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சர்யப்படுவர். வாழ்க்கைத் துணை வழியே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதுபோல இருபக்கமும் ஒப்பின் வைத்த டிரஸ் உலகில் வேறெங்குமில்லை!! (PHOTOS)
Next post கமல்ஹாசனின் அரசியலைத் தாங்க மாட்டீர்கள்! -பாரதிராஜா