விஸ்வரூபம் திரையிட தமிழகத்தில் அனுமதி! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

Read Time:3 Minute, 33 Second

ind.kamalhasanவிஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட தமிழகத்தில் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. சற்று முன்னர் நீதிபதி குறித்த தீர்ப்பை வழங்கினார். விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழக அரசு விதித்த தடையினை நீக்கி படத்தை நாளை தமிழகம் எங்கும் திரையிடுமாறு அதிரடி உத்தரவினை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கமலஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் படத்துக்கு தமிழகம், புதுவையில் தடை விதிக்கப்பட்டது. இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பதால் இரு மாநில அரசுகளும் இந்த நடவடிக்கையை எடுத்தது. தடையை நீக்கும்படி கமலஹாசன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதன் மீது கடந்த 24-ந்தேதி முதல் கட்ட விசாரணை நடந்தது. 26-ந்தேதி நீதிபதி வெங்கட்ராமன் விஸ்வரூபம் படத்தை பார்த்தார். 28.01.2013 திங்கள்கிழமை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது சம்பந்தப்பட்டவர்களுடன் கமலஹாசன் பேசி சுமூக தீர்வு காணவேண்டும் என்று நீதிபதி அறிவுரை வழங்கினார். தீர்ப்பை 29.01.2013க்கு தள்ளி வைத்தார். இதனைத் தொடர்ந்து 29.01.2013 காலை முதல் விசாரணை நடந்தது.

விசாரணையின் போது தமிழக அரசின் வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், திரைப்பட தணிக்கைத்துறை சட்டப்படி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

திரைப்பட தணிக்கையில் முறைகேடு என்ற தமிழக அரசின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு வழக்கறிஞர் வில்சன் மறுப்பு தெரிவித்தார்.

விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்வதில் வாரிய உறுப்பினர்கள் சரியாக செயல்பட்டுள்ளனர். கடந்த அக்டோபரில் படத்தை பார்வையிட்டு ஆட்சேபகரமான 14 காட்சிகளை நீக்க உத்தரவிடப்பட்டது. 1.08 நிமிடம் ஓடக்கூடிய காட்சிகள் நீக்கப்பட்ட பின்பே தணிக்கை சான்று தரப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் வில்சன் வாதம் செய்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இரவு 8 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் தீர்ப்பு இரவு 10 மணிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி தீர்ப்பு 10 மணிக்கு வழங்கப்பட்டது. விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை உயர்நீதிமன்றம் நீக்கியது. தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் படத்தை தற்போது முதல் வெளியிடலாம் என்றும் கூறியுள்ளது.

ind.kamalhasan

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post இன்றைய ராசிபலன்கள்: 30.01.2013!