மொபைல் போன் உள்ளவர்கள் சீன நாட்டில் 110 கோடி பேர்

Read Time:1 Minute, 49 Second

phone
சீனாவில் மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 110 கோடியாக அதிகரித்து உள்ளது.உலகமெங்கும், மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை, கடந்தாண்டை விட, இவ்வாண்டு அதிகரித்து உள்ளது.சீனாவில், மக்கள் தொகை, கடந்தாண்டு, 135.6 கோடியாக இருந்தது. இது, 2011ம் ஆண்டை காட்டிலும், 66.90 லட்சம் அதிகம். இங்கு, ஒவ்வொரு நூறு பேருக்கு, 82 என்ற விகிதத்தில், மொபைல் போன் உள்ளது.

கடந்தாண்டு, சீனாவில், 12.59 கோடி மொபைல் போன்கள் விற்பனையாகி உள்ளன. இதில், 10.44 கோடி மொபைல் போன்கள், “3ஜி’ வசதி கொண்டவை. இதையும் சேர்த்தால், சீனாவில் தற்போது, “3ஜி’ மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், 23.28 கோடி பேர்.இந்த நாட்டில் மொபைல் போனில், இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 51 கோடியில் இருந்து, 56.40 கோடியாக உயர்ந்து உள்ளது.

இங்கு, சமூக வலைத்தளங்களான, டுவிட்டர், பேஸ்புக் ஆகியவை தடை செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும், தனிச்சுற்றுக்கான வலைத்தளங்கள் (மைக்ரோ பிளாக்ஸ்) 24.40 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அனைவரும் அவற்றை தங்களது மொபைல் போன்கள் மூலமே பயன்படுத்துகின்றனர்.இவ்வாறு சீன தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய அரசின் ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்தை விரைவூபடுத்தத் தீர்மானம்
Next post தந்திமுறைமையை கைவிடத் தீர்மானமில்லை