இறுதிக்கட்டப் போரின் போது ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே -அமைச்சர் வாசுதேவ

Read Time:2 Minute, 54 Second

vaasutheva
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே இதனை யாரும் மறுக்க இயலாது என ஆளும்கட்சி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட போரின்போது படையினரால் பதியப்பட்டு பொறுப்பேற்கப்பட்ட எவரும் காணாமற்போகவில்லை என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய தெரிவித்துள்ள நிலையிலேயே வாசுதேவ நாணக்கார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணாமல் போனவர்களின் உறவூகள் சாட்சியமளித்துள்ளனர். இதனை இராணுவத் தரப்பினர் மறுக்கின்றமை முழுப்பூசினிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்ற செயலாகும். எனவே வன்னியில் காணாமல்போன தமிழ்மக்களின் நிலை கண்டறியப்பட வேண்டுமென அவர் கோரியூள்ளார். ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்டு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும். ஏனென்றால் உள்நாட்டு யூத்தமும் அதன்பின்னரான செயற்பாடுகளும் முக்கியமானவை. அத்துடன் அவ்வறிக்கையில் மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்க்க பல்வேறு வழிமுறைகளை நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் சுட்டிக்காட்டியூள்ளன. குறிப்பாக காணாமல் போனவர்களின் விபரங்கள்இ உறவினர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் பதிவாகியூள்ளது. இதில் யார் கூட்டிச் சென்றது? எப்போது சம்பவம் இடம்பெற்றது போன்ற விடயங்கள் மிகத் தௌpவாக குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இதனை பொய் எனக் கூறக்கூடாது. நியாயமான சாட்சியங்களின் அடிப்படையில் உண்மைகளை அரசு கண்டறிய வேண்டும். இல்லையென்றால் மீண்டும் பிரச்சினைகள் மேலோங்கி நாட்டின் நற்பெயருக்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் சுட்டிக்காட்டியூள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவூடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
Next post பத்ம பூஷன் விருதை புறக்கணித்தார் பாடகி எஸ்.ஜானகி