கொழும்பை அதிர வைக்கும் பாடசாலை தமிழ் மாணவிகள் மீதான பாலியல் துஷ்பிரயோம்!

Read Time:3 Minute, 30 Second

ANI.gifEsel
கொழும்பிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்விகற்கும் இரு மாணவிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பெண்கள் பாடசாலை மாணவ, ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவையாவன,
குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்த பின்னர், குறித்த மாணவிகளை வத்தளை பகுதிக்கு அழைத்துச் சென்று இந்த குற்றச்செயலை புரிந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தனித்தனியாகவே இந்த இரு மாணவிகளும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்திருந்த போதிலும் இவ்விடயம் குறித்து முறைப்பாடு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் குறித்த இரு மாணவிகளும் பாடசாலையிலிருந்து தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு புற்க்கோட்டையில் வர்த்தகராகச் செயற்படும் குறித்த நபர் மாணவிகளை ஏதோ ஒரு காரணத்தைக் கூறி அழைத்துச் சென்றுள்ளதமாக தெரியவந்துள்ளது. வத்தளையிலுள்ள வீட்டுக்குத் தனித்தனியாக அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகளுக்கு குளிர்பானம் அருந்தியது மட்டுமே ஞாபகத்தில் உள்ளது. சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து மாணவிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்மூலம் பாலியல் வல்லுறவு இடம்பெற்ற விவகாரம் உறுதிப்படுத்தப்பட்டது.

கைதான குறித்த நபர் இச்சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னரும் மாணவியொருவரை தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படமெடுத்து மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைதான சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியில் வவுனியாவைச் சோ்ந்த சில மாணவிகளினது புகைப்படங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் வவுனியாவில் குறித்த சந்தேகநபர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கைதான சந்தேகநபர் திருமணமானவர் என்றும் இரண்டு பிள்ளைகளுக்கு தந்தை எனவும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காத்தான்குடியில் பாம்புமழை
Next post போர் குற்றம் புரிந்த இலங்கை இராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா விசா மறுப்பு!