புதுமணத் தம்பதிகள் 70 வீதமானோர் அச்சத்தின் பிடியில் இருக்கிறார்களாம்! -புதிய ஆய்வு

Read Time:2 Minute, 8 Second

ANI.LOVE.romantic
பொதுவாக திருமணம் முடிந்து ஹனிமூனுக்குச் செல்லும் தம்பதிகள் அனைவரும் ஒருவித மயக்கத்திலேயே இருப்பார்கள் எனச் சொல்லுவதுண்டு. இதனாலேயே வீடுகளில் குறைந்தது ஆறுமாதங்களுக்கு அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள் பெரியவர்கள். விருந்து, தேனிலவு, சினிமா என கேளிக்கை என அனைத்தும் முடிந்து மறுபடியும் இயல்பு நிலைக்குத் திரும்ப ஒரு வருடமாவது ஆகி விடும். அதுவும் நம்மவர்களை கேட்கவே வேண்டாம். இந்த விடயத்தில் எல்லாம் கில்லாடிகள். நம்மவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த மயக்கத்தோடு கர்ப்பமும் இணைந்து கொள்ளும்.

ஆனால் அவுஸ்திரேலியா நாட்டில் திருமணமான புதிய தம்பதிகளில் 76 விழுக்காட்டினர் ஒரு வித அச்ச உணர்வுடனே வாழ்கிறார்கள் என்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் அம்பலமாகியுள்ளது.

டிய்க்கின் பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலிய மையத்தின் சார்பில் வாழ்க்கை தரம் என்ற தலைப்பில் 2 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கணவன், மனைவி இருவரும் திருமணமான முதல் வருடத்தில் மனதளவில் மகிழ்ச்சியாக இல்லை என்றே கூறியுள்ளனர்.

தேனிலவு என்பது சம்பிரதாயத்துக்குரிய சடங்கு என்பதால் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் ஒருவித பதட்டத்துடனே வாழ்கிறோம் என்கின்றனர் புதிய ஜோடிகள்.

இரண்டாம் வருடத்தில் எந்த அச்சமும் இல்லையாம். இதை சொன்னதில் பலர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையூடன் உறவூகளை வலுப்படுத்த அமெரிக்கா விருப்பம்
Next post விஸ்வரூபம் படத்துக்கு ஜனவரி 28 வரை தடை