இலங்கையின் தேசிய கொடியை அகற்றி மலேசியாவில் ஆர்ப்பாட்டம்

Read Time:4 Minute, 31 Second

malesiaமலேசியாவிற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகரை மன்னிப்புக் கேட்குமாறு வலியுறுத்தி (23) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கையின் தேசிய கொடியை அகற்றி எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 27ம் திகதி மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் கூடியவர்களை பிரதி உயர்ஸ்தானிகர் சுனில் விக்ரமசிங்க தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பியதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

மலேசியாவில் உள்ள இலங்கை பணியாளர்கள் சிலர் சந்தித்த துஸ்பிரயோகம் மற்றும் சம்பளம் வழங்கப்படாமை குறித்து முறையிட தமிழ் முற்போக்கு அணி இலங்கை உயர்ஸ்தானிகராலயம் சென்றுள்ளது. அப்போது பிரதி உயர்ஸ்தானிகர் சுனில் விக்ரமசிங்க தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பியுள்ளார். ஒட்டுமொத்த மலேசிய மக்களையும் அவமானப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட சுனில் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் மன்னிப்பு கேட்டால் அமைதியாக சென்றுவிடுவோம் என தமிழ் முற்போக்கு அணி தலைவர் கே.அர்ஜுன் ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது 30 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்ஸ்தானிகரை சந்திக்க வேண்டும் என அர்ஜுனும் அவரது ஆதரவாளர்களும் பொலிஸாரின் தடையை மீறிச் செல்ல முற்பட்ட வேளை, பொலிஸாருக்கும் அர்ஜுனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து பொலிஸார் கடமையாற்றுவது முறையற்ற செயல் என அர்ஜுன் கூறியுள்ளார். “எங்களை ஏன் தடுக்கிறீர்கள். எங்களை தடுக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை. சுனில் மலேசியாவை பற்றி தவறாக பேசியுள்ளார். நீங்கள் அவரை கைது செய்ய மாட்டீர்கள். ஆனால் மலேசியர்களான எங்களை தடுக்கிறீர்கள்” அர்ஜுன் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். “இலங்கை … இறந்தது … இலங்கை … இறந்தது … நாம் ஒரு நாட்டுப்பற்றாளர்கள் … நாம் நமது உரிமைகளை பாதுகாப்போம்” போன்ற வாசகங்களை கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டனர். கபார் எம்பி எஸ்.மாணிக்கவாசகமும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.

அதன் பின்னர் கபார் எம்பி எஸ்.மாணிக்கவாசகமும் அர்ஜுனும் மலேசிய உயர்ஸ்தானிகராலயத்தில் பொது உறவு அலுவலரை சந்தித்தனர். சுனில் கூறியதாகச் சொல்லப்படும் கருத்தை நாம் மறுக்கிறோம் இது குறித்து பொலிஸ் விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுப்போம் என பொது உறவு அலுவலர் உறுதி அளித்துள்ளார்.

அதன்பின்னர் மன்னிப்பு கேட்பதற்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கபார் எம்பி எஸ்.மாணிக்கவாசகம் தெரிவித்தார். அப்படி இரண்டு வாரங்களில் மன்னிப்பு கேட்காவிட்டால் ஆயிரம் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்வேன் என கபார் எம்பி எஸ்.மாணிக்கவாசகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரான்சில் ஈழத் தமிழரைக் குத்திக் கொன்ற அல்ஜீரியப் பெண்!
Next post கர்ப்பத்தின் மகிழ்ச்சியை கணவனுடன் சேர்ந்து வெளிப்படுத்திய பாடகி ஷகீரா!! (PHOTOS)