லண்டன் தமிழ் ஒலிரப்புக் கூட்டுத்தாபனம் (ரீ.பி.சி ) கலையகத்தை நாசப்படுத்திய புலியின் குண்டர்கள் மூவர் கைதின் போது நடந்த உண்மைச் சம்பவங்கள் என்ன?? யார் இந்த நோர்வே சேது??

Read Time:16 Minute, 2 Second

tbc.bmpரீ.பி.சி வானொலியின் செயலகத்தை உடைத்து நாசப்படுத்திய மூவர் லண்டன் பொலிஸாரினால் வியாழன்இரவு கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். ரீ.பி.சி வாடனொலியில் வழமையாக பிரதி வியாழக்கிழமைகள் தோறும் இடம்பெறும் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி 08.06.06மாலை பிரித்தானிய நேரம் இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி ஆரம்பமாகி ஏறக்குறைய 45 நிமிட இடைவெளியில் புலிகளின் வன்முறைக் குண்டர்களான ராஜன் அல்லது குமார் என்றழைக்கப்படும் அனுசிறிகுமார் தாமோதரம்பிள்ளை (நோர்வேயில் வசிப்பவரான) ஊத்தைசேது எனப்படும் நடராஜா சேதுரூபன் லண்டனில் ரைம்ரவல் உரிமையாளரான சுதா எனும் தர்மலிங்கம் சுதாகரன் மற்றும்

இவரது சகோதரர் தர்மலிங்கம் உதயகுமார் மற்றுமொரு குடும்பஸ்தரான ‘அ” (குடும்பநலன் கருதி இவரது பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.) ஆகியோர் ஆயுதங்கள் சகிதம் ரி.பி.சி கலையகத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் தமது முதல் நடவடிக்கையாக ரி.பி.சி கலையகத்தின் அனைத்துப் பகுதிகளையும் தாம் கொண்டு சென்ற புகைப்படக்கமரா மூலம் புகைப்படங்கள் எடுத்துவிட்டு வாசல் கதவிற்கு அண்மையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கமராவை உடைத்துள்ளனர்.

தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபத்திற்குள் நுழைவதற்காக வாசலில் பொறுத்தப்பட்டிருந்த (னுழழச டீநடட) மணியினை தொடர்ச்சியாக அழுத்திக் கொண்டிருந்தமையால் நிகழ்ச்சியை தொடர முடியாத நிலையில் நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டது. பெல்லை அழுத்தியவர்கள் அங்கு அரசியல் ஆய்வில் கலந்து கொண்டிருந்த திரு.விவேகானந்தன் அவர்களை வெளியில் அனுப்புமாறும் அவருக்குத் தகுந்த பாடம் கற்பிப்பதற்காகவே தாம் அங்கு வந்திருப்பதாகவும் கொலைமிரட்டல் விடுத்தனர்.

இந்நிலையில் நிகழ்சியில் பங்குகொண்டிருந்த திரு.விஸ்வலிங்கம் சிவலிங்கம் மற்றும் நிகழ்ச்சி ஒலிபரப்பிற்கு உதவிபுரிந்து கொண்டிருந்த திரு.ராஜன் ஆகியோர் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு தமது உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்துத் தெரிவித்துள்ளனர். அத்துடன் மேற்படி புலிக்காடையர்களிடமும் நாம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளோம் நீங்கள் இவ்விடத்தை விட்டு போய்விடுமாறும் கூறியுள்ளனர். ஆயினும் குடிபோதையில் இருந்த இவர்கள் தம்வசம் இருந்த ஆயுதங்களைக் காட்டி நாம் தேசியத்தலைவரைத் தவிர யாருக்கும் பயப்பட மாட்டோமெனக் கூறி தொடர்ந்து அட்டகாசம் போட்டுக் கொண்டிருந்த சமயம் அங்கு வருகைதந்த லண்டன் பொலிஸாரைக் கண்டவுடன் காரில் தயாராக இருந்த குடும்பஸ்தரான ‘அ” சென்று விட்டார்.

அவருடன் சுதா என்பவரும் தப்பிச்சென்று விட்டார். மேற்படி சுதாவிடமே தமது கமரா மற்றும் தம்வசமிருந்த ஆயுதங்களைக் கொடுத்து அவரையும் தப்பிச் செல்லுமாறு மற்றையவர்கள் தெரிவித்து தப்பிக்க விட்டுள்ளனர். மற்றைய புலிக்குண்டர்களான ராஐன் சேது உதயன் மூவரையும் லண்டன் பொலிஸார் அவ்விடத்திலேயே கைதுசெய்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தவர்களான சிவலிங்கம், விவேகானந்தன் மற்றும் நிகழ்ச்சி ஒலிபரப்பாளர் ராஜன் ஆகியோரின் வாக்குமூலங்களைக் கேட்டறிந்ததும் மூவரையும் கைதுசெய்த பொலிஸ் தமது நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு தடுத்து வைத்துள்ளனர். மேற்படி சம்பவத்தை கேள்வியுற்ற ரீ.பி.சியின் நிர்வாகஸ்தர் தம்பா, போல் பிரகலாதன் மற்றும் ரீ.பி.சியின் தற்காலிக பணிப்பாளராக பணியாற்றும் சிவாஜினி ராம்ராஜ் அகியோரும் கலையகத்திற்குச் சென்று பொலிஸாரிடம் தமது வாக்குமூலங்களை வழங்கினர்.

கைதுசெய்யப்பட்ட மூவரில் நடராஜா சேதுரூபன், அனுசிறிகுமார் ஆகிய இருவரும் தொடர்ந்தம் பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு மற்றையவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதேவேளை தடுப்புக் காவலில் உள்ள இருவர் மீதும் பொருட்களுக்கு சேதம் விளைவித்தல், கொலைப்பயமுறுத்தல் உட்பட பல சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இதன் எதிரொலியாக சிவாஜினி ராம்ராஜ்சிவலிங்கம், விவேகானந்தன் மற்றும் நிகழ்ச்சி ஒலிபரப்பாளர் ராஜன் ஆகியோரிடம் நேற்றும் இன்றும் லண்டன் பொலிசாரினால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன் ஆதாரங்களையும் திரட்டி வருகின்றனர்.

சேதுவின் கைதைத் தொடர்ந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த புலிகளின் நிதர்சனம் தளத்தின் பொய்ச் செய்திச்சேவை தற்போது சேதுவின் சகாக்களான புலிஉறுப்பினர்களால் நடாத்தப்படுவதாகத் தெரியவருகின்றது.

யார் இந்த ஊத்தைசேது எனும் சேதுரூபன் நடராஜா???

திருட்டுத்தனமாக பிரித்தானியாவிற்குள் நுழைந்த இவர் வதிவிட உரிமை மறுக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறுமாறு 1990ம்ஆண்டு பிரித்தானிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தார். அதனை அசட்டை செய்த இவர் தலைமறைவாக பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருந்தவேளை பிரித்தானியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டார். இந்நிலையில இவரின் சகாக்கள் சிலர் ரி.பி.சியின் பணிப்பாளர் திரு.ராம்ராஜ் அவர்களின் உதவியை நாடியதற்கமைய ராம்ராஜ் அவர்களும் சீவகன் அவர்களும் இணைந்து சேதுவின் விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவரை வெளியில் கொண்டு வந்தனர்.

இவர் விடுதலையான பின்னர் அன்றாட வாழ்க்கைக்கு வசதியற்ற நிலையில் ராம்ராஜ் குடும்பத்தவர்கள் மற்றும் ராம்ராஜ் நண்பர்களின் உதவியுடன் வாழ்ந்து பின்னர் நோர்வே வதிவிடஉரிமை பெற்ற லதா எனும் பெண்ணை இரண்டாம்தாரமாக மணமுடித்து அன்றிலிருந்து இன்றுவரை வேலைவெட்டி எதுவும் இல்லாது தாதியாகப் பணிபுரியும் மனைவியின் சம்பாத்தியத்திலும் புலிகளினால் வழங்கப்படும் பணத்திலும் வாழ்ந்து வருவதுடன் புலிகளுக்கான மஞ்சள்தர இணையத்தளங்களை நடாத்தி வருபவர்.

இவரின் திருமணத்திற்காக தாம் ரீ.பி.சியில் பணிபுரியும் ஊடகவியலாளர் என்னும் பொய்யான சான்றிதழ் ஒன்றினை இவரின் தற்போதைய மனைவியான லதா அவர்களின் குடும்பத்தாரிடம் சமர்ப்பித்து தனக்கான வாழ்க்கைத் துணைவியைத் தேடிக்கொண்டவர் தான் இந்த நடராஜா சேதுரூபன் என்பவராகும் அத்துடன் இவரது திருமணத்திற்கு சாட்சியாகக்கூட ஒப்பமிட எவரும் முன்வராத நிலையில் திரு ஆனந்தசங்கரி அவர்கள் கொழும்பிலுள்ள பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று இத்துரோகிக்கு திருமணம் செய்தவைத்தார். அதற்குப் பரிசாக அவரைப்பற்றிய பல அவது}றுகளை புலிகளின் மஞ்சள்தர இயணயத்தளத்தில் வெளியிட்டு அவமானப்படுத்தியவன் தான் இந்த சேது.

அதேபோல் இவனால் நடாத்தப்படும் புலிகளின் மஞ்சள்தர இயணயத்தளங்களான நிதர்சனம் போன்றவற்றிற்கு நம்பிக்கைத்துரோகத்தின் மொத்த வடிவமான எஸ்.ஆர் அல்லது தராக்கி எனும் சிவராமை பிரதம செய்தியாளனாகவும், புலிகளின் உளவுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானையும் அவனது சகாக்களையும் தகவலாளராகவும் கொண்டு செயல்படுபவன்.

இதில் சிவராம் கொழும்பில் வைத்து ஆயுததாரிகளினால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவுடன் ‘குய்யோமுறையோ” என்று கூப்பாடு போட்டு நம்பிக்கைத்துரோகியை மாமனிதனாக்கிய பெருமை இவனையும் புலிகளையுமே சாரும். அதுமட்டுமல்லாது அக்கொலையுடன் உண்மைக்குப் புறம்பாக புளொட் அமைப்பைச் சம்பத்தப்படுத்தி புளொட் தலைவர் சித்தார்த்தன், இராணுவப்பொறுப்பாளர் பீற்றர், சர்வதேசப் பொறுப்பாளர் சுவிஸ்ரஞ்சன் ஆகியோர் குறித்து மிகக்கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு தற்போது புளொட் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட சட்டரீதியான நடவடிக்கையால் தற்போது சர்வதேசப்பொலிசாரினால் விசாரணைக்கு உள்ளாக்கப்படவுள்ளவன் தான் இந்த சேது. (ஏற்கனவே வெளிநாடுகளில் உள்ள புலிகளின் முக்கிய பிரமுகர்கள் இதுசம்பந்தமாக பொலிசாரின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.)

அதேபோல் மாற்றுக் கருத்துடையவர்கள் எனும் காரணத்தினால் டக்ளஸ்தேவானந்தா கருணாஅம்மான போன்றவர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழும் பலர் (லண்டன் ராம்ராஐ;, nஐயதேவன,; விவேகானந்தன், Nஐர்மனி nஐமினி, nஐகநாதன், நோர்வேராஐன், டென்மார்க் குமாரதுரைகுடும்பம், சுவிஸ்ரஞ்சன், அவுஸ்திரேலியா அருநோதயன், கனடா ந.மு உட்பட பலர்) இவனால் நடாத்தப்படும் புலிகளின் மஞ்சள்தர இணையத்தளங்களான நிதர்சனம், நெரு.., எட்ட…, யாழ்.. போன்றவற்றில் மிகக்கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வருபவன் தான் இந்த சேது.

யார் இந்த ராஐன் அல்லது குமார் எனும் அனுசிறிகுமார் தாமோதரம்பிள்ளை??

பிரித்தானியாவில் பலதரப்பட்ட குற்றச்செயல்களிலும் வன்முறையிலும் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு எட்டு மாதகாலம் சிறைவாசம் அனுபவித்தவர் தான் இந்த ராஐன் அல்லது குமார் எனும் அனுசிறிகுமார் தாமோதரம்பிள்ளை என்பவராகும்;. ஆரம்பத்தில் னெ;மார்க் நாட்டில் இருந்து பின்னர் சுவிஸ் சென்று குமார் எனும் பெயருடன் அப்போதைய புலிப்பொறுப்பாளர் முரளியுடன் இணைந்து பல அட்டகாசங்களைப் புரிந்து சட்டசிக்கலுக்கு உள்ளாகி லண்டன் சென்று பலமோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு தற்போது புலிகளின் முக்கிய பிரமுகராக செயற்பட்டு வருபவர்.
இவர் இந்தியப் பெண்ணை திருமணம் முடித்து இரு குழந்தைகளுக்குத் தந்தையாவார். இவர் தனது சொந்த மனைவி மக்களை பராமரிக்க முடியாத நிலையில் விவாகரத்து செய்துவிட்டு வேலைவெட்டி எதுவும் இல்லாது புலிகளுக்காக செயற்படுவதாகக் கூறி பலமோசடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்.

1992ம்ஆண்டு முதல் இரு வருடகாலம் திரு ராம்ராஜ் அவர்களின் தயவில் வாழ்க்கையை ஓட்டிய இவர் பின்னர் புலிகள் அமைப்பினால் விலைக்கு வாங்கப்பட்டு திரு ராம்ராஜ் குடும்பத்தினருக்கும் ரீ.பி.சி வானொலிக்கும் எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பயன்படுத்துபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சுதா எனும் தர்மலிங்கம் சுதாகரன்??

இலங்கை அரசின் நேரடி உதவியில் ‘ரைம்ரவல்ஸ்” எனும் நிறுவனத்தை ஆரம்பித்து தமிழ்மக்களின் பணத்தில் லட்சாதிபதியாக மாறியபின் தற்போது புலிகளின் லண்டன் பிரமுகர்களில் ஒருவராகச் செயல்பட்டு வருபவர். தனது தம்பியான உதயன் எனும் தர்மலிங்கம் உதயகுமாருடன் இணைந்து பலமோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்.
நீச்சல் தடாகத்துடன் கூடிய இவரது லண்டன் வீட்டின் பெறுமதியே பத்துலட்சம் ஸ்ரேலிங் பவுணுக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

(இவர்கள் குறித்த மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெற்றால் தொடர்ந்து பிரசுரிப்போம்)

(அதிரடி இணையத்தளத்தின் லண்டன் சுவிஸ் நோர்வே நாட்டைச் சேர்ந்த நிருபர்கள் நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் சேகரித்த செய்திகள் மற்றும் பலதரப்பட்ட பொதுமக்களிடம் இருந்து பெற்ற தகவல்களின் தொகுப்பு) Thanks….WWW.ATHIRADY.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆப்கானிஸ்தானில் கழுதை மீது வெடிகுண்டு
Next post வவுனியா கிளைமோரில் நெக்கோட் ஊர்தி சிக்கியது