சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மாலுமி விடுதலை

Read Time:2 Minute, 3 Second

news-breaking-news-003
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மாலுமி விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 2 ஆம் திகதி மேற்படி மாலுமி உட்பட 20 பேர் எம்.வி ஒரன என்ற யூ.எ.யி நிறுவனத்தின் தலைமையில் இயங்கும் கப்பலில் வைத்து சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டனர்.

இலங்கையை சேர்ந்த சூரசேன என்ற மாலுமியே இவ்வாறு மேற்படி கப்பலில் இருந்த 30 பேருடன் சேர்த்து கடத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இம்மாலுமி விடுதலை செய்யப்பட்டு துபாய், நைய்ரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.

துபாயில் நடைபெற்ற உலக எரிசக்தி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக்கொள்வதற்கா சென்றிருந்த போது சூரசேனவின் விடுதலை தொடர்பில் கப்பல் நிறுவனத்தினரை வலியுறுத்துவதற்கான ஏற்பாடொன்றை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை இதற்கான செயன்முறைப்படுத்தலுக்கான கோரிக்கை ஒன்றையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விடுத்திருந்தார். சூரசேன தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர் இலங்கை உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக வெளிவிவகார அமைச்சு உறுதிசெய்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமான இறக்கையில் சுற்றியிருந்த மலைபாம்பு
Next post சீனாவில் கடும் மழை மற்றும், நிலச்சரிவினால் மண்ணில் புதைந்து 43 பேர் பலி