யுவதிகளை நிர்வாண படங்கள் பிடித்து செக்ஸ் சித்திரவதை!
இளம் யுவதிகளின் நிர்வாண புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு விடுவார் என்று சொல்லி மிரட்டி வந்த நபர் ஒருவர் இவ்வார ஆரம்பத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் ஒரு பொறியியலாளர் என்றும் பல டசின் கணக்கான பெண்களை இவ்விதம் மிரட்டி செக்ஸிற்கு வற்புறுத்தி வந்திருக்கின்றார் என்றும் பொலிஸார் கண்டு பிடித்து உள்ளார்கள்.
இவருக்கு வயது 36. கிரிபத்கொடவில் வைத்து பிடிக்கப்பட்டு இருக்கின்றார். இவரை சில காலத்துக்கு முன் மனைவி பிரிந்து சென்று உள்ளார். இவர் இங்கு தனிமையில் வசித்து வந்திருக்கின்றார்.
இவரது இருப்பிடத்தை சோதனை செய்த பொலிஸார் பல நூற்றுக்கணக்கான புகைப்படங்களை இவரது உடைமையில் இருந்து கைப்பற்றினர்.
இவரால் வசப்படுத்தப்பட்டு பல யுவதிகள் இவரது வீட்டில் சில காலம் தங்கி இருந்து உள்ளனர். இவர்களைத்தான் நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் புகைப்படங்கள் பிடித்து இருக்கின்றார். குறிப்பாக குளியலறையில் இரகசிய கமரா பொருத்தி பல புகைப்படங்களை எடுத்து இருக்கின்றார். 26 இரகசிய கமராக்களை இவர் வீட்டின் பல இடங்களிலும் பொருத்தி இருந்திருக்கின்றார்.
இந்நபரின் அயலவரான அழகுக் கலை நிபுணர் ஒருவர் மூலமாகத் பொலிஸாருக்கு விபரம் தெரிய வந்தது. அழகுக் கலை நிபுணர் மூன்று நாட்கள் இந்நபரின் வீட்டில் கோவில் காரியம் ஒன்றுக்காக தங்க நேர்ந்தது. ஆனால் வழமை போலவே இரகசிய படங்கள் பிடித்துக் கொண்ட நபர் அழகுக் கலை நிபுணரை மிரட்டி இருக்கின்றார்.
பேஸ் புக்கில் நிர்வாண புகைப்படங்களை பிரசுரித்து விடுவார் என்று மிரட்டி பணம் கேட்டு இருக்கின்றார். அத்துடன் செக்ஸிற்கும் வற்புறுத்தி இருக்கின்றார். அழகுக் கலை நிபுணர் இவருடன் நிர்ப்பந்தத்தின் பேரில் செக்ஸ் வைத்துக் கொண்டார்.
ஏழு மாத காலம் இந்நபரின் ஆசைக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட அழகுக் கலை நிபுணர் இறுதியில் பொலிஸாருக்கு இவரை காட்டிக் கொடுக்கின்ற தீர்மானத்தை எடுத்தார். அழகுக் கலை நிபுணரை பயன்படுத்தி நபரை கையும் மெய்யுமாக பொலிஸார் பிடித்தனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating