துவாரகேஸ்வரன் மீது அசிட் வீச்சு சம்பவம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின்

Read Time:2 Minute, 39 Second


மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் தம்பியும் ஈஸ்வரன் ரேடர்ஸ் நிறுவன உரிமையாளருமாகிய துவாரகேஸ்வரன் மீது அசிட் வீச்சு சம்பவம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் சுமித் ஜெயக்கொடியிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.ஈ.எரிக் பெரேரா இன்று தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, துவாரகேஸ்வரன் மீது அசிட் வீச்சுடன் தொடர்புடையவர்கள் யாராது கைதுசெய்யப்பட்டுள்ளனரா என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.

கடந்த 29ஆம் திகதி நல்லூர் அலுயத்திற்கு முன்பாக வைத்து துவாரகேஸ்வரன் மீது அசிட் ஊற்றப்பட்ட சில மணித்தியாலயங்களுக்கு முன்னர் காரைநகர் சிவன் கோவில் பகுதியில் துவாரகேஸ்வரனை பின்தொடர்ந்த நபர் நின்ற இடத்திற்கு அருகில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் சுமித் ஜெயக்கொடி நின்றார் என்றும், அதே ஆட்கள் தான் நல்லூர் ஆலய சூழலில் வைத்து அசிட் வீச்சு மேற்கொண்டிருந்ததால் சம்பவம் தொடர்பில் ஆளுநரின் செயலாளருக்கும் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே சுமித் ஜெயக்கொடியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எரிக் பெரேரா மேலும் கூறினார்.

அதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் தனது உறவினர் ஒருவரையும் துவாரகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையிலும் வாய்முறைப்பாடு பெற்று வருகின்றதாகவும், சம்பவம் தொடர்பில் எவரையும் கைதுசெய்யவில்லை என்றும், பொலிஸார் சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றதாகவும் அவர் மேலும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மது போதையில், பௌத்த தேரரை ‘மச்சான்’ என்றவர் கைது
Next post தாலிபான்களால் தலையில் சுடப்பட்டிருந்த மலாலா வீடு திரும்பினார்