அடல் பாலசிங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அரசாங்கம் குற்றச்சாட்டு

Read Time:3 Minute, 32 Second


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடல் பாலசிங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அடல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் எனவும், பெண் புலிகளுக்கான தலைமைப் பொறுப்பாளராக கடமையாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

10 வயது சிறுமிகளுக்கு பயிற்சிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிறுவர் போராளிகளின் கழுத்தில் அடல் பாலசிங்கம் சயனைட் வில்லைகளை மாட்டி விட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிக்கினால் சயனைட் வில்லைகளை அருந்தி உயிரை மாய்த்துக் கொள்ளுமாறு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேல்நாட்டு பெண் மற்றும் தாதி ஒருவர் இவ்வாறு கொடூரமான செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான இளம் சிறுமிகள் உயிரிழக்கக் காரணமாக யுத்தப் பயிற்சிகளை வழங்கிய அடல் பாலசிங்கம் பிரித்தானியாவின் சர்ரே பிரதேசத்தில் வாழ்ந்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மனிதாபிமானத்திற்கு எதிரான யுத்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட பெண் ஒருவர் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

அடல் பாலசிங்கத்திற்கு எதிராக பிரித்தானியா எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ள பிரித்தானியாவில், புலிகளின் சர்வதேச தலைமைச் செயலகம் அமைந்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கமொன்றின் உறுப்பினர்கள் எவ்வாறு பகிரங்க ஆர்ப்பாட்டம் நடத்த முடியும்?, அரசியல் தலைவர்களுக்கு எதிராக எவ்வாறு போராட்டம் நடத்த முடியும்? என பாதுகாப்பு அமைச்சு கேள்வி எழுப்பியுள்ளது.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி திரட்டுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போத அடல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரதிநிதித்துவம் செய்திருந்தார் என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரன்வேயில் நிறுத்த முடியாமல் தொடர்ந்து ஓடி, வீதியில் விபத்துக்கு உள்ளான விமானம்!
Next post புலிகளின் பரிதி படுகொலை: பிரெஞ்சு பாம்பு குருப்புக்கு மேல் பழிபோடும் பிரெஞ்சு பொலிஸ்!