இத்தாலி, பெர்லுஸ்கோனி விவாகரத்து: மாதம் 40 லட்சம் டாலர் ஜீவனாம்சம்

Read Time:1 Minute, 25 Second


இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்வதற்கான ஒப்பந்தத்தின் அங்கமாய் அவருக்கு மாதா மாதம் கிட்டத்தட்ட நாற்பது லட்சம் டாலர் ஜீவனாம்சம் கொடுத்துவர சம்மதித்துள்ளார். சில்வியோ பெர்லுஸ்கோனி இளம் பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று குற்றம்சாட்டி இரண்டாவது மனைவி வெரோனிகா லாரியோ மூன்று வருடங்களுக்கு முன் விவாகரத்து கோரியிருந்தார். பெர்லுஸ்கோனிக்கு மூன்று பிள்ளைகளைப் பெற்றவர் வெரோனிகா ஆவார். மிலான் நகருக்கு அருகில் பெர்லுஸ்கோனியும் வெரோனிகாவும் வாழ்ந்துவந்த 10 கோடி டாலர் மதிப்புடைய பெரிய மாளிகை வீடு பெர்லுஸ்கோனியின் பெயரிலேயே இருக்கும் என்று இந்த விவாகரத்து சொத்துப் பங்கீட்டு ஒப்பந்தம் அமைந்துள்ளதாக கொரியெர் டெல்லா செரா என்ற இத்தாலிய செய்தித்தாள் கூறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post நோர்வே கண்டேனரில் புலிகளுக்கு வந்த FM ரேடியோ ஒலிபரப்பிகள்!