முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம் முன் பறக்கவிடப்பட்டிருந்த புலிக்கொடி!

Read Time:1 Minute, 9 Second


முல்லைத்தீவில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்திற்கு முன்னால் புதன்கிழமை இனந்தெரியாத நபர்களினால் புலிக்கொடி ஒன்று பறக்க விடப்பட்டிருந்தது. 2004ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்த மக்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காக சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 8.30 மணிக்கு விசேட பூசை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டடிருந்தன. இந்த நினைவாலயத்திற்கு முன்னால் உள்ள பொதுநோக்கு மண்டபத்தின் தண்ணீர் தாங்கியின் மேல் இன்று காலை 6 மணியளவில் இந்த புலிக்கொடி ஏற்றப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து காலை 7 மணிக்கு சம்பவம் இடத்திற்கு வந்த இராணுவத்தினர், புலிக்கொடியை அங்கிருந்து அகற்றியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளுக்கு மாதாந்தம் 5 மில்லியன்களை வழங்க உடன்பட்ட ராஜீவ்காந்தி.. – விக்கிலீக்ஸ் தகவல்
Next post தாய்லாந்திலிருந்து 24 இலங்கையர்கள் நாடு கடத்தல்!