குஜராத்தில் பாஜக!, ஹிமாசல் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி!

Read Time:3 Minute, 51 Second

இந்தியாவில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், ஆளும் பாரதீய ஜனதாக் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் குஜராத் மாநிலத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மீண்டும் நான்காவது முறையாக வெற்றி பெறுகிறது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் வென்றதை விட இது இரண்டு இடங்கள் குறைவு. அதே நேரம் காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளைக் கூடுதலாகப் பெற்று 61 இடங்களை கைபபற்றியுள்ளது. ஆனால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் அக்கட்சிக்கு கிடைக்குமா என்பது இதுவரை தெரியவில்லை.

மீண்டும் முதல்வராகிறார் மோடி

மணி நகர் தொகுதியில் போட்டியிட்ட மாநில முதல்வர் நரேந்திர மோடி 86,373 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்வேதா பட்டை வென்றார். ஸ்வேதா பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி சஞ்ஜீவ் பட்டின் மனைவி என்பது குறிப்பிடத்தகுந்தது.

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அர்ஜும் மோத்வாடியா தோல்வியடைந்துள்ளார். பா ஜ க விலும் சில பிரபலங்கள் தோல்வியடைந்துள்ளனர்.

மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய கேஷுபாய் பட்டேலின் குஜராத் பரிவர்த்தன் கட்சி படு தோல்வியடைந்துள்ளது.

இந்த வெற்றியை ஆறு கோடி குஜராத்திகளுக்கு காணிக்கையாக செலுத்துவதாக மோடி தெரிவித்துள்ளார். இந்த வெற்றி நல்ல நிர்வாகம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களால் கிடைத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் குஜராத்தில் தமது கட்சிக்கே வெற்றி என்று இந்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.

ஹிமசல் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி

ஹிமாசல் பிரதேச சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், தற்போது ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை இழந்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முதல்வராக இருந்த பிரேம் குமார் டுமல் வெற்றி பெற்றாலும் தமது கட்சியின் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். அங்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் யார் முதல்வராக தேர்தெடுக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை.

மாநில சட்டசபையில் உள்ள 68 இடங்களில், காங்கிரஸ் கட்சி 36 இடங்களிலும், பாஜக 24 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவ்வப்போது கிளாமர் படங்கள்..
Next post பிரபல பாடகர் நித்யஸ்ரீயின் கணவர் தற்கொலை