பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கைக்கு எதிராக ஷிராணி பண்டாரநாயக்க வழக்குத் தாக்கல்!

Read Time:2 Minute, 16 Second

பிரதம நீதியரசர் ஷிராணி தனக்கு எதிராக சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சற்றுமுன் வழக்குத்தாக்கல் செய்துள்ளார். பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கென பாராளுமன்றத் தெரிவிக்குழுவொன்று சபாநாயகரால் நியமிக்கப்பட்டது. எனினும் விசாரணைகளின் இடைநடுவே தான் உரிய முறையில் நடத்தப்படவில்லை எனக் கூறி பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க வெளிநடப்புச் செய்தார்.

இவரைத் தொடர்ந்து தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விசாரணைகள் நியாயமான முறையில் இடம்பெறவில்லையெனக் கூறி குழுவிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தனர்.

எனினும் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் 5 குற்றச்சாட்டுக்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டதாகவும் இதில் 3 இல் பிரதம நீதியரசர் குற்றவாளியாக இணங்காணப்பட்டதாகவும் அறிவித்தனர்.

இந்நிலையில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க த தனக்கு எதிராக சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராணுவத்தினரை திருமணம் செய்யுமாறு தமிழ்ப் பெண்கள் கட்டாயப்படுத்தப் படுகின்றனர் -மு.கருணாநிதி
Next post தென் கொரியாவில் முதல் முறையாக பெண் அதிபர்