மாரடைப்பு வராமல் தடுக்க மஞ்சள்..!
மாரடைப்பு வராமல் தடுக்க மஞ்சள் போதும் : மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிப்பு புதுடில்லி : “மாரடைப்பு வராமல் தவிர்க்க, மஞ்சள் போதும்’ என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.கனடாவில் உள்ள, சுவாசக் கோளாறு ஆராய்ச்சி மைய நிபுணர்கள் இது தொடர்பாக ஆய்வு செய்து, இதை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது:மஞ்சளில், மஞ்சள் நிறத்தை தருவது, அதில் உள்ள,”கர்குமின்’ (விதையில் உள்ள ரசாயன பொருள்) எனப்படும் ஒரு கலவை. அதில் ரசாயன சத்து உள்ளது. உணவில் சேர்த்து சாப்பிடும் போது,மஞ்சளில் உள்ள சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது; புற்றுநோய் கட்டி ஏற்படாமல் தடுக்கிறது; ரத்தக்குழாய்களில் அடைப்பு வராமல் தடுக்கிறது; பாக்டீரியா தாக்குதலை முறியடிக்கிறது.மஞ்சளில் உள்ள “கர்குமின்’ ரசாயனம், உடலில் உள்ள செல்களுக்கு முழு பாதுகாப்பை தருகிறது. இதயத்தில் ரத்தக்குழாய் சுருங்குவதற்கும், புற்றுநோய் ஏற்படுவதற்கும் அதிக அளவில் புரோட்டீன் உற்பத்தியாவது தான் காரணம். அதை இந்த ரசாயனம் தடுக்கிறது.”ஜீன்’களில் உள்ள குரோமோசோம்களில் கோளாறு இருந்தால் தான், இதய வால்வுகள் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அங்கேயே அந்த கோளாறுகளை,மஞ்சள் சத்து தடுத்துவிடுகிறது.எங்களின் முதல் கட்ட சோதனையில், எலிகளுக்கு பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளோம். ஆனால், மஞ்சளை அதிகமாகவும் பயன்படுத்தக்கூடாது. எந்த அளவு வரை பயன்படுத்தலாம் என்பதை இப்போது ஆராய்ந்து வருகிறோம்.இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.கனடா நிபுணர்களுக்கு முன்பே, மைசூரில் உள்ள, மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி மைய நிபுணர்கள், மஞ்சள் மகிமை பற்றி ஆராய்ந்து, இதே உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், “கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க மஞ்சள் பயன்படுகிறது; இதை நாங்கள் ஏற்கனவே சோதனை செய்துவிட்டோம். மஞ்சள் சேர்ந்த உணவை சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள அடர்த்தி குறைந்த கொலஸ்ட்ரால் அளவு குறைந்து விட்டது தெரியவந்தது’ என்று தெரிவித்தனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating