ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்..!

Read Time:4 Minute, 0 Second

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான, புரூனே நாட்டின் சுல்தான், ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. எண்ணெய் வளமிக்க நாடான புரூனே, 1967ல் தனி நாடானது. அதன் சுல்தானாக (மன்னராக) ஹசனன் போக்கியா முயுசுதீன் வாதுலா இருந்து வருகிறார். எண்ணெய் வளத்தால் கொழிக்கும் அந்நாட்டு சுல் தானின் வருமானத்திற்கு, அளவே இல்லாமல் போய் விட்டது. ஒரு வினாடிக்கு அவரது வருவாய், 5,277 ரூபாய். அதுவே, ஒரு வாரத்திற்கு 3,191 கோடி ரூபாய். அவரது அரண் மனை இரண்டு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 1,788 அறைகள் உள்ளன. இதுதான் உலகிலுள்ள அரண்மனைகளிலேயே மிகப் பெரியது. இங்கு 275 ஆடம்பர குளியலறைகள் உள்ளன. அதில் உள்ள பொருட்கள் எல்லாம், தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்டவை. இவரது மகளுக்கு 18 வயது நிரம்பியதும் நடத்தப்பட்ட பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சுல்தான் அவருக்கு ஏர் பஸ் ஏ-320 விமானம் வழங்கினார். அவர் பயன்படுத்துவதோ போயிங் 747 விமானம். இதை எல்லாம் விட, வித விதமான கார்களை வாங்கி குவிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சுல்தான். அவரது கேரேஜில், தற்போது 7,000 கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு, 2,312 கோடி ரூபாய். அவரிடம் உள்ள 7,000 கார்களில் அதிகளவில் இருப்பவை ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் தான். இவற்றின் எண்ணிக்கை மட்டுமே 604. இது தவிர, மெர்சிடீஸ் பென்ஸ்-574, பெராரி-452, ஆஸ்டின் மார்ட்டின்-300, பென்ட்லீ-382, பி.எம்.டபிள்யூ – 209, ஜாகு வார்-179, போர்ஷெய்-160, கோனிநெக்-134, லம்போர்க்கினி-21, மெக்லாரன் எப்1 ரகம்-8, பியூஜோ-5, ஷெல்பி சூப்பர் 1 ஆகியவை குறிப்பிடத்தக்க பிரபல மாடல் கார்கள். இந்த அதிக விலை யுள்ள ஆடம்பர கார் களை தவிர, மேலும் நான்காயிரம் வெவ்வேறு நிறுவன கார்களும் அவருக்கு சொந்தமாக உள்ளன. இவ்வளவு கார்களை யும் அவரது அரண்மனை அருகே உள்ள விமான நிலையத்தின் ஒரு மூலை யில் நிறுத்தி வைத்துள்ளார். கார்கள் நிறுத்தப் படும் பார்க்கிங் ஏரியாவுக்கும் கார் நிறுவனங் களின் பெயர்களையே சூட்டி உள்ளார். அவற்றை பராமரிப்பதற்கென தனித்தனியே மெக்கானிக்கு களையும் வைத்துள்ளார். அவர்களுக்கு உணவு, உறைவிடம், கை கொள்ள முடியாத அளவுக்கு சம்பளமும் வழங்கி வருகிறார். அதில் குறிப்பிட்ட சில கார் மெக்கானிக்குகளுக்கு ஆண்டுக்கு 1 கோடியே 15 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. உலகில் மிக முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களின் அனைத்து பிரபல கார்களும் அவரிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் சில குறிப்பிட்ட மாடல்கள், அவரது விருப்பத்திற்கேற்ப கார் நிறுவனங்கள் தயாரித்து அளித்தவை என்பதும் குறிப்பிடத் தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதவிப் பிரமாண நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்களில் ஜனாதிபதியின் படத்திற்கு மட்டுமே அனுமதி..!
Next post அலெக்சாண்டரின் மனதை மாற்றிய குதிரை..!