திருமலையில் பல இடங்களில் கடல் நீர் உள்வாங்கியது ‐இரண்டாவது நாளாக கடும் கடல் சீற்றம்..!

Read Time:1 Minute, 51 Second

திருக்கோணமலை மாவட்டத்தில் இன்று  ஞாயிற்றுக்கிழமை 07.11.2010 காலை கடலின் சீற்றம் அதிகரித்துள்ளது. திருக்கோணமலை மட்டக்களப்பு ஏ15 வீதியில் உப்பாறு. குங்கை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக க பாலம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதனை அண்டியதாக அமைக்கப்பட்டுள்ள மண் அணைகளை கடல் நீர் உள்வாங்கி உள்ளது. வீதியிலும் கடல் நீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக திருக்கோணமலை மூதூருக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிக பாலத்திற்கு சேதம் ஏற்படலாம் என அஞ்சப்படுகின்றது. இதற்கு பாதிப்பு ஏற்பட்டால் நிர்மாணிக்கப்பட்டு வரும் நிரந்தர பாலத்திற்கான பணிகளும் தடைப்பட வாய்பு உள்ளது. அத்துடன் திருக்கோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் இறங்கு துறைக்கு அருகிலான பிரதேசம். கபீப் நகரில் கடல் நீர் உள்வாங்கி உள்ளது. காலை வேளையில் கடலின் சீற்றம் அதிகரித்தது. மக்கள் பாதுகாப்புக்காக இடம் பெயர்ந்து வருகின்றனர். இவர்கள் தமது உடமைகளை எடுத்துக் கொண்டு அச்சம் காரணமாக அருகில் உள்ள பாடசாலையிலும் உறவினர்களது வீடுகளிலும் தஞ்சமடைந்து வருகின்றனர். திருக்கோணமலை நகரப்புகுதி மீனவர்களும் தொடர்ந்து தொழிலுக்கு  செல்வதை நிறுத்தியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேசிய அடையாள அட்டைத் தரவுகள் கணனி மயப்படுத்தப்படவுள்ளன..!
Next post யுத்த இடம்பெற்ற வலயங்களில் தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு..!