‘நமீதா ஐ லவ் யூ’..!
கன்னடத்தில் நமீதா நடித்துள்ள புதிய படத்துக்கு நமீதா ஐ லவ் யூ என்றே பெயர் வைத்து விட்டனர். படத்தில் யோகா டீச்சராக கலக்கியுள்ளாராம் நமீதா. கவர்ச்சி, கவர்ச்சி, கவர்ச்சியைத் தவிர வேறு எதுவும் இல்லை என்ற இமேஜுடன் இருப்பவர் நமீதா. இவரை வைத்து கவர்ச்சிப் படம் மட்டுமே எடுப்பது என்ற கொள்கையுடன் அனைத்து திரையுலகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு படம் எடுத்துக் கொண்டிருக்கின்றன. ஹூ படம் மூலம் கன்னடத்திலும் புகுந்த நமீதா, முதல் படத்திலேயே ரசிகர்களை படபடக்க வைத்து விட்டார். இப்போது நமீதா ஐ லவ் யூ என்ற படம் மூலம் கன்னட ரசிகர்களுக்கு யோகா கற்றுத் தர கிளம்பி விட்டார். ஜெயசிம்ம ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் யோகா டீச்சராக வருகிறாராம் நமீதா. படப்பிடிப்பின்போது படு சமர்த்தாக, நேரம் தவறாமல் கரெக்ட்டாக வந்து போகிறாராம் நமீதா. இதைச் சொல்லிச் சொல்லி மாய்கிறார் ரெட்டி. கடந்த ஒரு மாதமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு நாள் கூட படப்பிடிப்புக்கு நமீதா லேட்டாக வந்ததில்லையாம் நமீதா. மாபியா கும்பலுக்கு எதிராக போராடும் யோகா டீச்சராக நடித்துள்ளாராம் நமீதா. நமீதா படம் என்றாலும் கூட கவர்ச்சி பெரிய அளவில் இருக்காதாம். கதைக்கு அது தேவைப்படாது என்பதால் கவர்ச்சி விஷயத்தை அடக்கியே வைத்துள்ளேன் என்கிறார் ரெட்டி. படத்தில் யோகா செய்வதோடு, பைட்டும் போட்டு அசத்துகிறாராம் நமீதா. இது சமூகத்திற்கு ‘மெசேஜ்’ தரும் படம் என்கிறார் ரெட்டி. அப்ப ‘மசாஜை’ எதிர்பார்க்க முடியாதுதான்!
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating