விற்பனைக்கு வருகிறது கூகுளின் ‘குரோம் நெட்புக்’..!

Read Time:1 Minute, 24 Second

கூகுள் நிறுவனம் தனது குரோம் இயங்குதளத்தை ( Chrome Operating System ) கொண்டியங்கும் நெட்புக் கணனிகள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வருமென தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நவம்பர் மாதம் கூகுள் தனது குரோம் இயக்குதளத்தை ( Chrome OS ) அறிமுகம் செய்திருந்தது. தற்போது ‘இன்வென்டெக் ‘ எனப்படும் தாய்வான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்தே இதனை உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏஸர் மற்றும் ஹெவ்லட் பெக்கார்ட் நிறுவங்கள் கூகுளின் இவ்வியங்குதளத்தினை கொண்டியங்கும் கணனிகளை உருவாக்கிவருவதுடன் அவை இவ்வருட இறுதியில் சந்தைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.  ஏற்கனவே கூகுள் தனது சொந்த தயாரிப்பான நெக்ஸஸ் (Nexus) எனும் ‘ஸ்மார்ட்’ போன்களை விற்பனை செய்திருந்தது. எனினும் இவை சந்தையில் வரவேற்பைப் பெறவில்லை. இருந்தபோதிலும் கூகுள் தனது அடுத்தமுயற்சியில் இறங்கியுள்ளமை பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீபாவளி தினமன்று சகல மதுபான சாலைகளையும் மூடுமாறு அகில இலங்கை இந்து காங்கிரஸ் ஜனாதிபதிடம் கோரிக்கை..!
Next post ஓட்டலில் மர்ம குரல் : ஜெனிலியா ஓட்டம்..!