எவரஸ்ட் சிகரத்திலும் இனி 3ஜி சேவை..!

Read Time:1 Minute, 18 Second

உலகின் உயர்ந்த சிகரமான எவரஸ்டிலிருந்தும் இனிமேல் இணையத்தினை உபயோகிக்க முடியும்.  வீடியோ அழைப்பினையும் மேற்கொள்ளமுடியும்.  3 ஜி வலையமைப்பினூடக இவையனைத்தையும் அவ்வுயரத்தில் சாத்தியப்படுத்தியுள்ளது நேபாளிய தொலைத்தொடர்பு நிறுவனமான என்செல். சுமார் 8 தொலைத்தொடர்பு கட்டமைப்புக்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5200 அடி உயரம் வரை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  என்செல் என்பது சுவீடன் நாட்டு நிறுவனமான டெலிசொனெராவினுடையதாகும்.  இதுவரைகாலமும் மலையேறுபவர்கள் செய்மதி தொலைபேசிகள் மற்றும் சாதாரண கைத்தொலைபேசி வசதியை மட்டுமே பெற்றுவந்தனர்.  இனிமேல் அவர்கள் காலநிலை தொடர்பான அறிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவற்றை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரித்தானியாவில் தமிழர்களின் நடைபயணம் நேற்று ஆரம்பம் பலர் பங்கேற்பு..!
Next post தமிழ் மொழிக்கு முன்னால் சிங்களவர்களும், சிங்கள மொழிக்கு முன்னால் தமிழர்களும் ஏதுவும் அறியதவர்களாக மாறியுள்ளனர்‐டளஸ்..!