தளபதி பாதிப்பில் பேசியதுதான் அந்த நண்பேன்டா வசனம்-சந்தானம்..!
பாஸ் என்கிற பாஸ்கரனின் இரண்டாவது ஹீரோ எனும் அளவுக்கு காமெடியில் கலக்கியிருந்தவர் சந்தானம். கவுண்டரின் ஸ்டைலில் அவர் அடித்த கமெண்டுகளுக்கு தியேட்டர் கூரையே அதிருமளவுக்கு விசிலும் கைத்தட்டலும் பறக்கிறது. இந்த எந்திரன் சுனாமியிலும் சற்று தாக்குப் பிடித்த படம் பாஸ் என்கிற பாஸ்கரன்தான். இதற்கு சந்தானம் – ஆர்யா கூட்டணியின் காமெடி சரவெடியே காரணம். இந்தப் படத்தில் வரும் நண்பேன்டா வசனம் படு பாப்புலர். ஆனால் இந்த ஒற்றைச் சொல்லை, தளபதி படத்தில் மம்முட்டியிடம் ரஜினி சொல்வாரே..’நீ என் நண்பேன்டா’ என்று.. அந்தக் காட்சி பாதிப்பில்தான் வைத்ததாகச் சொல்கிறார் சந்தானம். “சின்ன வயசிலேருந்தே நான் தலைவர் ரஜினி பேன். பள்ளிக்கூடத்துக்குப் போகும்போதுகூட ரஜினி சார் ஸ்டைலில்தான் ஹேர் கட் பண்ணிக்குவேன். இதுக்காக எங்க பிடி மாஸ்டர்கிட்ட வாங்கி அடி கொஞ்சமல்ல. ஆனாலும் யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன். நான் நடிக்க வந்த பிறகு, எப்படியாவது அவர்கூட நடிக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அது குசேலன்ல நிறைவேறினாலும், அவரோட வர்ற மாதிரி சீன் எதுவும் அமையல. இப்போ எந்திரன்ல அந்த வாய்ப்பு கிடைச்சது. சிலர் சொல்றாங்க, எனக்கும் கருணாசுக்கும் படத்தில ஸ்கோப் இல்லையேன்னு. இந்தக் கதையில எங்களுக்கு இந்த அளவுதான் வேலைன்னு தெரியும். இன்னொன்னு இது ரஜினி சார் படம். அவர் கூட நடிக்கணும்ங்கிறதுதான் எங்க ரெண்டு பேருக்குமே பிரதான நோக்கமா இருந்தது. ஒரு ரசிகனாத்தான் நான் ரஜினி சார்கூட இருந்தேன். தூரத்திலேருந்து பாத்துக்கிட்டிருக்கிற ரசிகன் ஒருத்தனுக்கு, திடீர்னு 30 நாள் ரஜினி சார் கூடவே இருக்கிற அதிர்ஷ்டம் கிடைச்சா…? அதை விவரிக்க வார்த்தை இல்லைங்க. செட்ல எங்க கூடத்தான் சாப்பிட்டார் ரஜினி சார். அவர் நினைச்சிருந்தா உலகத்திலேயே காஸ்ட்லியான கேரவன்ல சொகுசா இருந்திருக்க முடியும். ஆனா ஒரு நாள்கூட அவர் கேரவன் கேட்கல. அவரோட சீன் முடிஞ்சதும், என்கிட்டயும் கருணாஸ் கிட்டேயும் ஜாலியா சிரிச்சிப் பேசிக்கிட்டு, எங்களோட எதிர்காலத்துக்கான யோசனைகளை சொல்லி…. சான்ஸே இல்ல சார். இப்ப நினைச்சாலும் நெகிழ்ச்சியா இருக்கு. அவர் சினிமா சூப்பர் ஸ்டார் இல்ல. நிஜ சூப்பர் ஸ்டார்…,” என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating