நமீதாவைக் கடத்த முயன்ற கார் டிரைவர்..!
நடிகை நமீதாவை காரில் கடத்த முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார். தமிழ் பட உலகில், கவர்ச்சியின் உச்சமாகப் பார்க்கப்படுபவர் நடிகை நமீதா. ஜவுளிக்கடை திறப்பு, டிவி நிகழ்ச்சிகள், பொதுவிழாக்களிலும் அதிகமாகப் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் மூத்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள நமீதாவுக்கு அழைப்பு வந்தது. அந்த விழாவில் கலந்துகொள்ள நமீதாவும் அவருடைய, மேனேஜர் ஜானும் சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றனர். அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கியதும், டிரைவருக்கான சீருடை அணிந்த ஒரு இளைஞர் ஓடிவந்து, கரூர் நிகழ்ச்சிக்கு அழைத்துச்செல்ல வந்திருப்பதாக நமீதாவிடம் கூறினார். அதை நம்பி நமீதாவும் அவருடைய காரில் ஏறினர். உடனே காரை படு வேகத்தில் கிளப்பினார் அந்த இளைஞர். நிஜமாகவே நமீதாவை வரவேற்று அழைத்துச் செல்ல வந்திருந்த டிரைவர், இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், நமீதாவை ஏற்றிச் சென்ற காரைப் பின்தொடர்ந்தார். இந்த சம்பவம் பற்றி அவர், விழா குழுவினருக்கு ‘செல்போன்’ மூலம் தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து விழா குழுவினர் கரூரிலிருந்து ஏராளமான கார்களில் நமீதாவை ‘மீட்க’ திருச்சிக்கு விரைந்தார்கள். நமீதாவை ஏற்றி வந்த காரை வழியிலேயே மடக்கி, டிரைவரைப் பிடித்தனர். உடனே நமீதா காரிலிருந்து இறங்கி ஓடிவந்தார். உடனடியாக போலி டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்கள்.
பிதா மகன் ஸ்டைலில்…
பிடிபட்ட அந்த போலி டிரைவரின் பெயர், பெரியசாமி (வயது 26) திருச்சியைச் சேர்ந்தவர். நமீதா மீது அவருக்கு மிகவும் ஆசையாம். அதனால்தான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிதாமகன் ஸ்டைலில் கடத்திச் சென்று கொஞ்ச நேரம் உடன் இருந்துவிட்டு அனுப்ப முயன்றாராம். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating