எரி பொருட்களுக்கான விலை வீழ்ச்சியடையக் கூடும்..!

Read Time:2 Minute, 12 Second

எரி பொருட்களுக்கான விலை வீழ்ச்சியடைக் கூடுமென பெற்றோலிய வள அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு மூன்று மாதங்களில் எரிபொருளுக்கான விலையில் வீழ்ச்சி ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து நேரடியாக கொள்வனவு செய்யப்பட இருப்பதனால் விரைவில் விலைகளை குறைக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பத்தரமுல்லவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது பெற்றோலிய வள அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் உற்பத்தில் ஈடுபடும் நாடுகளிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுளளதாகக் குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் தரப்பினரிடமிருந்து கொள்வனவு செய்வதனை விடவும் நேரடியாக உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து கொள்வனவு செய்வதன் மூலம் நுகர்வோருக்கு அதிக நன்மைகளை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதத்தின் பின்னர் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை எனவும், விரைவில் நுகர்வோருக்கு சாதகமான வகையில் விலை மாற்றம் செய்யப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈராக்கிலிருந்து எரிபொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பில் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாராளுமன்றப் பேரவை ஜனாதிபதியின் அடுத்த நகர்விற்காக காத்திருக்கின்றது..!
Next post மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கம்..!