போருக்குப் பின்னரான சிறிலங்காவின் நன்மதிப்பை உயர்த்தும் பிரச்சாரங்களுக்கு பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சுமார் மூன்று மில்லியன் பவுண்கள் வழங்கப்பட்டுள்ளது..!

Read Time:5 Minute, 44 Second

போருக்குப் பின்னரான சிறிலங்கா அரசாங்கத்தின் நன்மதிப்பை உயர்த்தும் பொருட்டு அதற்கு வேண்டிய பிரச்சாரங்களை மேற்கொள்ளுமுகமாக பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு சிறிலங்கா அரசாங்கம் சுமார் மூன்று மில்லியன் பவுண்களை (4.7 மில்லியன் டொலர்)  வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது என்று பிபிஸி தெரிவித்துள்ளது. பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐநா அதிகாரிகள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொள்ள பெல் பொற்றிஞ்ஜர் குறூப் (Bell Pottinger Group) என்ற நிறுவனத்தையே அது இவ்வாறு பணிக்கு அமர்த்தியுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது. “சரியான தெரிவு சரியான விளைவு” என்பதையே தனது தாரக மந்திரமாக  பெல் பொற்றிஞ்ஜர் குறூப் (Bell Pottinger Group) நிறுவனம் கொண்டிப்பதாக தனது வலைப்பக்கத்தில் அது தெரிவித்திருக்கிறது. கடந்த வருடம்  விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டபோது மனித உரிமைகள் மீறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் கடுமையாக மறுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. சிறிலங்கா தனது  மனிதவுரிமைகள் தொடர்பபான நிலைமையை  விருத்தி செய்யத் தவறியதனால் ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவுக்கான ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை கடந்த ஜுலையில் நிறுத்தியது. புரூசல்ஸில் சிறிலங்காவுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தியதைத் தொடர்ந்து  சிறிலங்காவுக்கு ஆதரவாக அவ்வரிச்சலுகையை மீளப்பெறும் நோக்கில் இந்நிறுவனம் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் என நம்பப்பபடுகிறது. கடந்த வருடப் போரின் போது சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்றங்களை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து  அது பற்றிய நிபுணர் குழுவை  ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமிக்க முற்பட்ட வேளையில், அதனைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் இந் நிறுவனத்தை நாடியதாகவும் தெரிய வருகின்றது. புலம் பெயர்ந்த தமிழர்களிடம் புலி ஆதரவுக்குழுக்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தை முறியடிப்பதே பிரிட்டனைப் பொறுத்தளவில் இந்நிறுவனத்தின் முக்கிய பங்காகும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் லண்டனின் International Institute of Strategic Studies நிறுவனத்தில் உரையாற்ற இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இலங்கை வந்த போது அவருக்காதரவான பிரச்சாரங்களை இந்நிறுவனம் முன்னெடுத்திருந்தது. சிறிலங்காவின் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் கப்ரால் இவ்வாறு சில நிறுவனங்களை சிறிலங்கா வாடகைக்கு அமர்த்தியுள்ளதை உறுதிப்படுத்திய போதும் குறித்துக்காட்டப்பட்ட தொகை அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதனை உறுதி செய்ய மறுத்து விட்டார். எமது நாட்டின் மீது அவப்பெயரைச் சுமத்த பல்வேறு தரப்பினர் பெருமளவு பணத்தைச் செலவழித்து வருகின்றனர். ஊடக நிறுவனங்கள் பலவும் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. நாங்கள் எமது நாட்டின் நற்பெயரை நிலைநாட்டச் சாதகமான அனைத்தையும் செய்து வருகிறோம். இது எங்களுடைய பணி என்றும் அஜித் கப்ரால் பிபிஸிக்குத் தெரிவித்துள்ளார். இதேவேளை தன்னை இனம் காட்டாத சிறிலங்கா அரச வட்டாரம் ஒன்று இந்த வருடத்திற்காக 3மில்லியன் பவுண்கள் அந்நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டதை பிபிஸிக்கு உறுதிப்படுத்தி உள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பிபிஸியின் சிங்கள சேவை குறித்த நிறுவனத்தின் உடமைக்கம்பனியான ஊhiஅந ஊழஅஅரniஉயவழைளெ உடன் தொடர்பு கொண்ட போது அச்சட்டம் பிரிட்டனின் அரசாங்க திணைக்களங்ளையும் சில ஒப்பந்தக்காரர்களையுமே கட்டுப்படுத்தும் என்றும் தமக்கல்ல என்றும் அது தெரிவித்துள்ளது. அத்தோடு தங்களுடைய வாடிக்கையாளர்கள் வர்த்தக ரீதியாகவும் இரகசியத் தன்மையுடனுமே தொடர்பு கொள்கிறார்கள். நீங்கள் கேட்கும் தகவல்களை எங்களால் வழங்க முடியாது என்றும் அது தெரிவித்திருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 சூரியன்களுடன் கிரகங்கள்..!
Next post இந்திய இலங்கை உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள பூரண ஆதரவளிக்கப்படும்-சஜித் பிரேமதாஸ..!