11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’ ..!

Read Time:2 Minute, 26 Second
சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றம் நிகழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஜோவன்னா ஹெய்க் தலைமையில் இது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. 2004 முதல் 2007ம் ஆண்டு வரை செயற்கைக்கோள்கள் மூலம் சூரியனின் செயல்பாட்டை தொடர்ச்சியாக கண்காணித்தும் எடுக்கப்பட்ட போட்டோக்கள் மூலமாகவும் இது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தலைமை விஞ்ஞானி ஜோவன்னா ஹெய்க் கூறுவது: 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் நிகழும் சுழற்சிகள் மூலம் சூரியன் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது. இந்த சுழற்சியின் ஆரம்பத்தில் பூமியை சூரியக் கதிர்கள் அவ்வளவாக தாக்குவதில்லை. இந்த காலகட்டத்தில் பூமி குளிர்ச்சியாக இருக்கிறது. சுழற்சி முடிவில் வெப்பம் அதிக வீரியத்துடன் எழுகிறது. 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இதில் சில குழப்பங்களும் இருக்கின்றன. இந்த 11 ஆண்டு சுழற்சிப்படி சூரிய மண்டலம் தற்போது பூமியை குளிர்விக்கும் காலக்கட்டத்தில் உள்ளது. ஆனாலும், புவி வெப்பம் அதிகரித்து வருகிறது. சூரியனின் இயக்கம் தொடர்பாக முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. இதுகுறித்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. பூமி வெப்பமடைய சூரியக் கதிர்கள் மட்டும் காரணமல்ல. இயல்பாகவே பூமி வெப்பமடையும் தன்மையும், குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு தானே குளிரும் தன்மையையும் கொண்டது. இந்த கால இடைவெளி அவ்வப்போது மாறுபடுகிறது.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆஸி. பயணித்த 85 இலங்கையர் இந்தோனேசிய துறைமுகப் பொலிஸாரால் மீட்பு ..!(பட இணைப்பு)
Next post மகன் பெயரை பச்சை குத்திய மாளவிகா..!