திருமணத்துக்கு எனக்கு அவசரமில்லை-திரிஷா..!

Read Time:2 Minute, 15 Second
திரையுலகில் 1999-ல் அறிமுகமானவர் திரிஷா. சாமி, கில்லி, மவுனம் பேசியதே, திருப்பாச்சி, ஆறு போன்ற பல ஹிட்படங்கள் அவரை முன்னணி நடிகை யாக்கியது. தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடித்துள்ளார். காட்டா மீட்டா படம் மூலம் இந்திக்கும் போய் உள்ளார். தற்போது கமல் ஜோடியாக நடித்து வரும் மன்மதன் அம்பு ரிலீசுக்கு தயாராகிறது. அஜீத்துடன் “மங்காத்தா” படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திரிஷாவுக்கு 27 வயது ஆகிறது. மங்காத்தா முடிந்ததும் திருமணம் நடக்கலாம் என பேச்சு அடிபடுகிறது. இது பற்றி திரிஷாவிடம் கேட்ட போது மறுத்தார். நான் சினிமாவுக்கு வந்து எட்டு வருடங்கள் ஆகிறது. ஆரம்பத்தில் சுமாரான கதையம்சம் உள்ள படங்களில் நடித்தேன். ஆனால் சமீபகாலமாக நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருகின்றன. அபியும் நானும், விண்ணைத் தாண்டி வருவயா படங்ககள் சிறந்த கதையம்சம் உள்ளவை மன்மதன் அம்பு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். நம்பர் ஒன் நடிகை என பெயர் வாங்குவதே என் லட்சியம். எனவே திருமணத்துக்கு அவசரப்பட மாட் டேன். திரையுலகில் எனக் கென்று ஒரு அங்கீகாரம் இப்போது தான் கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது. இந்தியில் நான் நடித்த காட்டா மீட்டா படம் ஹிட்டாக வில்லை என்று பேசுகிறார்கள். நடிப்பதுதான் என் வேலை. படம் வெற்றியா? தோல்வியா என்றெல்லாம் சிந்திக்க மாட்டேன். இந்திப் படம் நடித்ததன் மூலம் மும்பையில் நிறைய பேர் பழக்கமாகி இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்போம்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதற்காக மேலும் இரண்டு முகாம்கள் நிர்மாணிக்கப்படும்-அவுஸ்திரேலியா..!
Next post தனது பெயரில் மோசடி ரசிகர்கள் ஏமாற வேண்டாம்-அசின்..!