மிளகாயைச் சுவைத்து உண்ணும் அதிசய குழந்தை..!

Read Time:2 Minute, 13 Second

நமது அன்றாட சமையலில் பச்சை மிளகாய் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. உணவின் காரச் சுவைக்காகவே சமையலில் இதனைச் சேர்க்கின்றோம். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல மிளகாயை உணவில் அதிகமாகச் சேர்த்து விட்டாலோ அதன் சுவை முற்றிலும் மாறிவிடும் தன்மைகொண்டது. தவறான வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டால் சிறுவரின் வாயில் பச்சை மிளகாயை உடைத்துத் தடவிவிடும் அன்னையரும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதனால் தான் மிளகாய் என்றாலே சிறுவருக்கு அலர்ஜி. சிலர் மிளகாயைக் கண்டாலே காத தூரம் ஓடுவார்கள். என்னதான் காரச் சுவைக்காக மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டாலும், உண்ணும் போது அதனைக் கவனமாக ஒதுக்கி விடுவதும் உண்டு. காரணம், மிளகாய் கடிபட்டால், உணவின் சுவையே அற்றுப் போய்விடும். காரமே எஞ்சி நிற்கும். அதற்கு மேல் உணவை உண்ண முடியாத நிலை கூட ஏற்பட்டுவிடும். இத்தகைய பயங்கரமான மிளகாயைச் சர்வ சாதாரணமாக ஒரு குழந்தை உண்கின்றதென்றால் ஆச்சரியமாக இல்லையா? ஆம், பலஸ்தீனத்தைச் சேர்ந்த 20 மாதங்களே ஆன நாமன் அமீர் என்ற சிறுவன் பச்சை மிளகாய்களை சர்வ சாதாரணமாகச் சுவைத்து உண்கின்றான் என்றால் நீங்கள் நம்பித்தானாக வேண்டும். இவனே உலகின் மிகவும் வயது குறைந்த மிளகாய் உண்ணும் நபராகக் கருதப்படுகின்றான். இவன் பிறந்து 14 மாதங்கள் முதற்கொண்டே உணவிலுள்ள மிளகாய்களை உண்ண ஆரம்பித்து விட்டதாக அவரது தாயார் தெரிவிக்கின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தானாக நிறம் மாறும் நவீன ஆடை..!
Next post சொந்த இடங்களில் சிங்கள மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும-ஜாதிக ஹெல உறுமய..!