தானாக நிறம் மாறும் நவீன ஆடை..!

Read Time:1 Minute, 45 Second

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தனது புதிய ஆடை வடிவமைப்புடன் தொழில்நுட்பத்தினையும் இணைத்து நவீன ஆடையொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளார். இவரது இந்ந ஆடையில் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஊடாக நிறச்சாயங்கள் செலுத்தப்படுகின்றன. இவ்வாடை ‘ பிசியூடோமோர்ப் ‘ என அழைக்கப்படுகின்றது. ‘ பிசியூடோமோர்ப் ‘ இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. உடம்புப்பகுதி வெள்ளை நிறத்தால் ஆனது. மற்றைய பகுதி மெல்லிய குழாய்களினால் ஆனது. இவ்வாடையின் கழுத்துப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் மூலம் நிறச் சாயங்கள் ஆடைகளுக்குச் செலுத்தப்படுகின்றன. இச்சாயங்களின் மூலம் ஆடை, பலவித நிறங்களில் தோற்றமளிக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் இலத்திரனியல் சேர்க்கிட் 9 வோல்ட் மின்கலங்களால் வலுவூட்டப்படுகின்றன. நிறச்சாயங்கள் தன்னிச்சையாக ஆடைகளின் மீது செலுத்தப்படுவதால் புதுவிதமான டிசைன்களில் ஆடைகள் காணப்படுவதாக இதனை உருவாக்கியுள்ள ‘அனொவுக் விப்ரச்ட்’ தெரிவிக்கின்றார்.நவீன ஆடை இயக்கப்படும் முறையினை இக் காணொளியில் காணமுடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்..!
Next post மிளகாயைச் சுவைத்து உண்ணும் அதிசய குழந்தை..!