வறிய மக்கள் வெளியேற்றப்படுவர்கள் என்ற ஐ.தே.கவின் குற்றச்சாட்டில் உண்மையில்லை–கோதபாய..!

Read Time:2 Minute, 27 Second
வறிய மக்கள் வெளியேற்றப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையும் கிடையாதென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சேரிப்புறங்களில் வாழும் வறிய மக்களை அந்த இடங்களிலிருந்து அகற்றி வசதியான இடங்களில் தங்க வைப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சேரிப்புறங்களில் வாழ்ந்து மக்களை வடக்கு கிழக்கிற்கோ அல்லது வெறும் இடங்களுக்கோ வெளியேறிச் செல்லுமாறு அரசாங்கம் உத்தரவிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளை தடுக்கும் முயற்சிகளில் எதிர்க்கட்சி ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வறிய மக்களை வீதிகளில் நிர்க்கதியாக்கும் திட்டம் கிடையாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நகர அபிவிருத்தி அதிகாரசபையும், காவல்துறையினரும் இணைந்து இந்தத் திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வரும் சேரிப்புற மக்களுக்கு போதியளவு வசதிகளுடன் கூடிய குடியிருப்பு வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கொழும்பில் வாழ்ந்து வரும் 67000 வறிய குடும்பங்களை அரசாங்கம் வேறும் பிரதேசங்களுக்கு வெளியேற்றி செல்வந்தர்களுக்கான இருப்பிடங்களை அந்தப் பிரதேசங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். மாவட்டத்தில் மீளக்குடியமர வந்த சிங்களக் குடும்பங்களின் தேவைகள் குறித்து அறிய சமுர்த்தி அதிகாரிகள் அங்கு விஜயம்..!
Next post ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்..!