உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் துவக்கம்!

Read Time:4 Minute, 46 Second

W.Football.jpgஉலகெங்கிலும் உள்ள பல கோடி கால்பந்தாட்ட ரசிகர்களின் கனவான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஜெர்மனியில் துவங்குகின்றது! மாலை துவக்க விழாவிற்குப் பின்னர் நடைபெறும் முதல் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி அணி, ஆப்ரிக்க அணியான கோஸ்ட்டா ரீக்காவுடன் மோதுகிறது. 2வது போட்டி அதே ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற இரண்டு அணிகளான போலந்து – ஈக்வேடார் இடையே நடைபெறுகிறது.

உலகக் கோப்பையை 5 முறை வென்றுள்ள பிரேசில் அணியின் முதல் போட்டி ஜூன் 13 ஆம் தேதி நடைபெறுகிறது.

இப்போட்டிகளில் ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து, ஜெர்மனி, செக்கோஸ்லோவாகியா, நெதர்லாந்து, போலந்து, சுவிட்சர்லாந்து, ஃபிரான்ஸ், போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி, செர்பியா, குரோஷியா, உக்ரைன், சுவீடன் ஆகிய 14 அணிகளும்,

தென் அமெரிக்காவிலிருந்து அர்ஜென்டினா, பராகுவே, பிரேசில், ஈக்வேடார், டிரினிடாட் அண்ட் டொபாகோ, கோஸ்ட்டா ரீக்கா ஆகிய 6 அணிகளும், ஆப்ரிக்காவிலிருந்து அங்கோலா, டோகோ, கானா, ஐவெரிகோஸ்ட், டுனீசியா ஆகிய 5 அணிகளும்,

வட அமெரிக்காவிலிருந்து மெக்சிகோ, அமெரிக்க ஐக்கிய குடியரசு அணிகளும், ஆசியாவிலிருந்து சௌதி அரேபியா, ஈரான், தென் கொரியா, ஜப்பான் அணிகளும், 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்ட்ரேலிய அணியும் தகுதி பெற்றுள்ளன.

இந்த 32 அணிகளும் 8 பிரிவுகளில், பிரிவுக்கு 4 அணிகளாக சேர்க்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஏ பிரிவில் ஜெர்மனி, கோஸ்ட்டா ரீக்கா, போலந்து, ஈக்வேடார் அணிகளும்,

பி பிரிவில் இங்கிலாந்து, பராகுவே, டிரினிடாட் அண்ட் டொபாகோ, சுவீடன் அணிகளும்,

சி பிரிவில் அர்ஜென்டினா, ஐவெரி கோஸ்ட், செர்பியா, நெதர்லாந்து அணிகளும்,

டி பிரிவில் மெக்சிகோ, ஈரான், அங்கோலா, போர்ச்சுகல் அணிகளும்

ஈ பிரிவில் ஐக்கிய அமெரிக்க குடியரசு, செக் குடியரசு, இத்தாலி, கானா அணிகளும்,

எஃப் பிரிவில் ஆஸ்ட்ரேலியா, ஜப்பான், பிரேசில், குரோஷியா அணிகளும்,

ஜி பிரிவில் ஃபிரான்ஸ், சுவிட்சர்லாந்து, கொரியா, டோகோ அணிகளும்,

ஹெச் பிரிவில் ஸ்பெயின், உக்ரைன், டுனீசியா, சௌதி அரேபியா அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் அப்பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் மோதும். இப்போட்டிகள் ஜூன் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

முதல் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் 2 அணிகள் அடுத்த சுற்றிற்குத் தகுதி பெறும். 2வது சுற்றுப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்ற அணிகள் மற்ற பிரிவுகளில் 2வது இடத்தைப் பிடித்துள்ள அணிகளுடன் மோதும். இப்போட்டிகள் 27 ஆம் தேதி வரை நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெறும்.

ஜூன் 30 ஆம் தேதியும், ஜூலை 1 ஆம் தேதியும் காலிறுதிப் போட்டிகளும், ஜூலை 4, 5 ஆம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும் நடைபெறும்.

ஜூலை 8 ஆம் தேதி அரையிறுதியில் தோற்ற 2 அணிகளும் 3வது இடத்தை கைப்பற்ற நடைபெறும் போட்டியில் மோதும். ஜூலை 9 ஆம் தேதி பெர்லினில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மிக்_29 போர் விமானம் நொறுங்கி விழுந்தது: விமானிகள் உயிர் தப்பினர்
Next post பாகிஸ்தானில் அல்-காய்தா தாக்குதல்