யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களுக்கு விசேட வீட்டுக் கடன் திட்டம் அறிமுகம்..!

Read Time:1 Minute, 26 Second

யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களுக்கு விசேட வீட்டுக் கடன்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சினால் இந்தக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை வங்கியினால் வழங்கப்படும் இந்த கடன்திட்டத்தின் மூலம் யுத்தத்தினால் கணவனை இழந்த ஆயிரக் கணக்கான பெண்கள் நன்மை அடைவார்கள் என சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். இந்தக் கடன் திட்டம் மிகக் குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களுக்கு நான்கு வீத வட்டியில்; இந்த வீடமைப்பு கடன் வழங்கப்படுகிறது. 250000 ரூபா வரையில் கடன் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடன் வழங்குவதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 50000 விண்ணப்பங்கள் வரையில் எதிர்பார்ப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எம்.வி சன் சீ கப்பலில் ஆயுதங்கள் இருக்கவில்லை – கனேடிய பாதுகாப்பு பிரிவினர்..!
Next post கனடாவில் தஞ்சமடைய என்ன காரணம்? : இலங்கை அகதிகள் கடிதம்..!