அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கடல் நீரை நிரப்பும் வைபவம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது..!

Read Time:1 Minute, 30 Second

அம்பாந்தோட்டையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘மாகம்புர சர்வதேச துறைமுகம்” எனப் பெயரிடப்பட்டுள்ள துறைமுகத்திற்கு கடல் நீரை நிரப்பும் வைபவம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் துறைமுகம், விமானப் போக்குவரத்து அமைச்சர் தயாசிறி திசேரா, பிரதியமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோர் பங்கேற்றனர். இத்துறைமுகத்திட்டத்திற்கு கடன் ஒப்பந்த அடிப்படையில் இருநாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் பேரில் சீன அராசங்கம் நிதி உதவி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரதான நிர்மாணப் பணி 2008 ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பமானது. 2011 ஏப்ரல் 15 இல் இதன் பணிகள் நிறைவு செய்யப்படவுள்ளன. அலைகள் முட்டும் சுவர்கள் 2 நிர்மாணிக்கப்பட்டு நீர்படுக்கை பிரதேசம் 17 மீற்றர் ஆழத்தில் தோண்டப்பட்டுள்ளது. கப்பல் நங்கூரமிட்டு நிற்கும் இடம், எரிபொருளுக்கான இடம், வீதிகள் மற்றும் கட்டிடங்கள் என்பன முதலாம் கட்டப் பணியில் அடங்குகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எம்.வி. சன் ஸீ கப்பலில் வந்த அகதிகளுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைள் நேற்று முதல் ஆரம்பம்..!
Next post அகதிகளின் வருகைக்கு எதிராக கனடாவில் ஆர்ப்பாட்டம்..!