எதிர்கால எரிபொருள் சிக்கன விமானம்..!

Read Time:2 Minute, 5 Second
சூழல் மாசடைதலிலிருந்து பாதுகாப்பதோடு எரிபொருள் சிக்கனமாகவும் பாரத்தில் குறைந்ததுமான எதிர்கால விமானத்தினை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 2050ஆம் ஆண்டளவில் வானில் பறக்கவுள்ள இந்த விமானத்தின் மாதிரியினை எதிர்கால விமான வரைபடங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பச்சையத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த விமானம் எதிர்காலத்தின் வானரசனாகத் திகழவுள்ளதாக வடிவமைப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். காற்றினை கிழித்துக்கொண்டு இலகுவில் பறக்கக்கூடிய விதத்தில் இந்த விமானத்தின் இறக்கைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதனுடைய வால்பகுதி ‘U’ வடிவில் அடைந்துள்ளதால் காற்றினை இலகுவில் கிழித்துக்கொண்டு மிக வேகமாக பறக்கக்கூடியதாக இருக்கும். பாரம் குறைந்த உலோகங்களை பயன்படுத்தியே இந்த விமானம் தயாரிக்கப்படவுள்ளது. இதனால் எரிபொருள் சிக்கனம் பேணப்படும். அத்தோடு சூரிய சக்தியினைப் பெறக்கூடிய வழிமுறைகளையும் இதில் பயன்படுத்தவுள்ளனர். 2050ஆம் ஆண்டு வானில் பறக்கும் நோக்கிலேயே இந்த விமானம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி தொடருமேயானால் 2030ஆம் ஆண்டளவில் முதலாவது விமானத்தினை தயாரிக்க முடியுமெனவும் எயார் பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை இந்தியா அனுப்ப வேண்டும் ‐ கருணாநிதியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை..!
Next post 21வது வீரமக்களின் நினைவாக நினைவு வீடியோ பாடல் தாய்லாந்து தோழர்கள்..!