இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை இந்தியா அனுப்ப வேண்டும் ‐ கருணாநிதியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை..!

Read Time:1 Minute, 55 Second
இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை இந்தியா அனுப்ப வேண்டும் என்று  தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டு கொண்டு உள்ளனர். முதல்வர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தன், மாவை.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ம.ஆ.சுமந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்மந்தன், முதல்வர் கருணாநிதியுடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது. போருக்கு பிறகு இலங்கை தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தவறி விட்டது. வன்னிப் பகுதியில் மீண்டும் ராணுவ மயமாக்கல்தான் நடைபெறுகிறது. இலங்கைத் தமிழர்களை சிறுபான்மையினராக்க ராஜபக்சே அரசு முயற்சி செய்கிறது. இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இந்த கோரிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். இந்த கோரிக்கையை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்தார்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாய்க்கும் மகன்களுக்கும் மரணதண்டனை: கல்முனை நீதிமன்றம் தீர்ப்பு
Next post எதிர்கால எரிபொருள் சிக்கன விமானம்..!