இத்தாலியில் விவாகரத்து கண்காட்சி

Read Time:1 Minute, 44 Second

இத்தாலியில் முதன் முறையாக விவாகரத்து கண்காட்சி நடைபெற்றது. இத்தாலியில் விவாகரத்து என்பது அரிதாக நடைபெறக் கூடிய விஷயம். ஆனால், சமீபகாலமாக அங்கு விவாகரத்து அதிக அளவில் நடக்கிறது. விவாகரத்து தொடர்பான கண்காட்சி சமீபத்தில் மிலன் நகரில் நடைபெற்றது.விவாகரத்து ஆனவர்கள் எப்படி தனிமையை சமாளிப்பது, விவாகரத்து வேண்டுவோர் அதை எப்படி தள்ளிப் போடுவது, சிறு சிறு பிரச்னைகளை வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துப் போவது எப்படி என்பது உள்ளிட்ட ஆலோசனைகளும் இந்த கண்காட்சியில் வழங்கப்பட்டன. விவாகரத்து செய்தே தீருவேன் என அடம் பிடிப்பவர்கள், சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கும் இங்கு அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த அரங்கில் அழகு சாதன நிலையங்களும் இடம் பெற்றிருந்தன.விவாகரத்து செய்து விட்டு புதிய துணை கிடைத்துள்ளவர்கள் எப்படி வாழ்க்கையை செம்மையாக நடத்துவது உள்ளிட்ட ஆலோசனைகளும் இந்த கண்காட்சியில் வழங்கப்பட்டன.ஆறு கோடி ஜனத்தொகை கொண்ட இத்தாலியில் 2007ம் ஆண்டு அதிகபட்சமாக 81 ஆயிரம் ஜோடிகள் பிரிந்தனர்; 50 ஆயிரம் பேர் விவாகரத்து பெற்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆஸ்திரேலியாவை அபாரமாக வீழ்த்தி சாம்பியன் ஆனது இங்கிலாந்து
Next post சீரற்ற காலநிலையால் விமானசேவைகள் இடைநிறுத்தம்