உலகின் ‘டாப்’ தேடப்படுவோர் பட்டியலில் ஒசாமா-தாவூத்
உலகின் தேடப்படுவோர் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன். மூன்றாவது இடத்தில் தாவூத் இப்ராகிம் உள்ளார். இரண்டாவது இடத்தை மெக்சிகோவின் போதை மருந்து கடத்தல் புள்ளியான ஜோகுன் கஸ்மேன் பிடித்துள்ளார். உலகின் டாப் தேடப்படுவோர் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மறைந்திருப்பதாகக் கருதப்படும் ஒசாமா கடந்த 8 ஆண்டுகளாக தேடப்பட்டு வருகிறார். உலகில் எந்த மனிதரையும் உலகம் இவ்வளவு தீவிரமாக, இவ்வளவு செலவு செய்து தேடியதில்லை என்ற ‘பெருமையையும்’ ஒசாமா பெற்றுள்ளார்.
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தாவூத் இப்ராகிம் 1993ம் ஆண்டு முதல் தேடப்பட்டு வருகிறார். மும்பை தொடர் குண்டுவெடிப்புக்குப் பின் தப்பியோடிய தாவூத், துபாயிலும் பின்னர் பாகிஸ்தானிலும் மறைந்து வாழ்ந்து வருகிறார்.
ஆயுதக் கடத்தல், தீவிரவாதத்துக்கு நிதியுதவி ஆகிய விஷயங்களில் அல்-கொய்தா, லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் தாவூத் கும்பலும் கைகோர்த்து செயல்பட்டு வருகிறது.
ஜோகுன் கஸ்மேன் மெக்சிகோவிலேயே பதுங்கியிருந்தாலும் அவனைப் பிடிக்க அந் நாட்டு அரசாலும் அமெரிக்காவாலும் முடியவில்லை. அமெரிக்காவுக்குள் போதை மருந்தை இன்னும் கடத்தி வருகிறது கஸ்மேன் கும்பல்.
இந்தப் பட்டியலில் இத்தாலியின் மாபியா கும்பல் தலைவரான மேட்டோ மெஸ்ஸீனா டெனாரோ நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating