தாய்லாந்து செஞ்சட்டை கிளர்ச்சியாளர்கள் தலைவர் சுட்டுக் கொலை
தாய்லாந்தில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தலைமை வகித்து வந்த முன்னாள் ராணுவ அதிகாரி கத்தியா சவாஸ்திபோல் சுட்டுக் கொல்லப்பட்டார். தாய்லாந்து நாட்டில் பிரதமர் அபிசித் வெஜ்ஜஜீவா தலைமையிலான கூட்டணி அரசு பதவி விலக வேண்டும் என்று கோரி கடந்த 2 மாதங்களாக தலைநகர் பாங்காக்கில் செஞ்சட்டை அணிந்த கிளர்ச்சியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கும் ராணுவம், போலீசாருக்கும் இடையே அவ்வப்போது நடந்து வரும் மோதல்களில் இதுவரை 35 பேர் இறந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆனால், கிளர்ச்சி படிப்படியாக வேகம் பெற்று வருகிறது. இந் நிலையில் சில நாட்களுக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது மர்மமான முறையில் சுடப்பட்ட கத்தியா சவாஸ்திபோல் இன்று மரணமடைந்தார்.
இதனால் தாய்லாந்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான போராட்டங்கள் மேலும் தீவிரமாகி வன்முறைகள் நடந்து வருகின்றன.
இதையடுத்து இன்று நாடு முழுவதும் விடுமுறையை அறிவித்துள்ளது அந் நாட்டு அரசு.
தாய்லாந்து நாட்டில் தட்சின் சினவத்ரா பிரதமராக ஆட்சி செய்துவந்தார். நீதிமன்றத் தலையீடு காரணமாக அவர் பதவி விலக நேர்ந்தது. அவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதையடுத்து பிரதமராக அபிசித் வெஜ்ஜஜீவா பதவியேற்றார். ஆனால் தாய்லாந்து நாட்டின் கிராமப் பகுதிகளில் தட்சின் சினவத்ராவுக்கு ஆதரவு அதிகம். எனவே கிராமவாசிகள் அவரை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரி மார்ச் 12 முதல் தலைநகர் பாங்காக்கில் குவிந்து கிளர்ச்சி செய்து வருகின்றனர்.
இதில் கணிசமானவர்கள் பெண்கள் [^], குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தட்சின் கம்யூனிஸ ஆதரவாளர் என்பதால் அவருக்கு எதிராகவும் பிரதமர் அபிசித் வெஜ்ஜஜீவாவுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவும் ஜப்பானும் செயல்பட்டு வருகின்றன.
இதனால் இந்த நாட்டு தூதரகங்களுக்கு எதிராகவும் கிளர்ச்சியாளர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் தான் போராட்டத்துக்கு தலைமை வகித்த மூத்த தலைவரான கத்தியா சவாஸ்திபோல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனால் அந் நாட்டில் கலவரம் மேலும் அதிகரித்துள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating