முற்றுகையால் பாங்காக் தத்தளிப்பு துப்பாக்கி சூட்டில் இளைஞர் பலி

Read Time:3 Minute, 7 Second

தாய்லாந்தில் சிவப்பு சட்டைக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானார்.தாய்லாந்தில் கடந்த 2006ம் ஆண்டு பிரதமராக இருந்த ஷினவத்ரே பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2008ல் நடந்த தேர்தலில் ராணுவத்தின் ஆதரவுடன் அபிசித் வெஜ்ஜஜிவா பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

தில்லுமுல்லு செய்து அபிசித் பிரதமராகி விட்டதாகக் கூறி, ஷினவத்ரேவின் ஆதரவாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தலைநகர் பாங்காக்கை முற்றுகை யிட்டுள்ளனர்.கடந்த மார்ச் மாதம் ஷினவத்ரே ஆதரவாளர்கள், சிவப்பு சட்டை அணிந்து பார்லிமென்டை முற்றுகையிட்டனர். இதனால், பார்லிமென்டிலிருந்து எம்.பி.,க்கள் ஹெலிகாப்டர் மூலம் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.

இரண்டு மாதமாக சிவப்பு சட்டைக்காரர்கள் பாங்காக் நகர வீதிகளை ஆக்கிரமித்துள்ளனர். எதிர்க்கட்சித் தொண்டர்களின் இந்த பிடிவாதம் காரணமாக, வரும் நவம்பர் மாதம் தேர்தலை நடத்துவதாக பிரதமர் அபிசித் கூறினார். ஆனால், போராட்டக்காரர்கள் இதற்கு உடன்படவில்லை. உடனடியாக பார்லிமென்டை கலைத்து விட்டு, தேர்தல் நடத்த வற்புறுத்தி வருகின்றனர்.நேற்று முன்தினம் போராட்டக்காரர்களின் தலைவர் தாக்கப்பட்டார். அவர் தலையில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது.

போராட்டக்காரர்கள் பாங்காக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தூதரகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை கலைக்க, பாதுகாப்பு படையினர் நேற்று தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 33 வயது நபர் காயம்பட்டு பலியானார்.பாங்காக் நகரின் மூன்று சதுர கிலோ மீட்டர் தூரத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைய, தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் நடந்த போராட்டத்தில் இதுவரை 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டாய்லெட்டுக்குள் நுழைந்து ப்ரீத்தி ஜிந்தாவை படம் பிடித்த ரசிகைகள்
Next post மரண தண்டனை கைதியை மணக்க அனுமதி