பொம்மை எலும்புக்கூட்டை தேடியவர்கள் நிஜ சடலத்தைக் கண்டுபிடித்தனர்

Read Time:2 Minute, 1 Second

usa-flag1.gif மறைத்து வைக்கப்பட்ட பொம்மை எலும்புக்கூட்டை கண்டுபிடிக்கச் சென்ற அமெரிக்க பள்ளி மாணவர்கள், நிஜ சடலத்தைக் கண்டு பிடித்தனர். அமெரிக்காவில், புளோரிடா மாவட்டத்திலுள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டதின் பகுதியாக குற்றவியல் பாடம் கற்பிக்கப்படுகிறது.

அவர்களுடைய ஆசிரியர் மரத்தாலான எலும்புக்கூடு பொம்மை செய்து அதை லாடர்டேல் பகுதியிலுள்ள பூங்காவில் ஒளித்து வைத்தார். அந்த பொம்மையில் துப்பாக்கி தோட்ட துளைத்த மற்றும் கத்தி குத்திய தடயங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

அந்த பொம்மையை கண்டுபிடிக்க வேண்டியது மாணவர்களின் வேலை. இதற்கான தேடுதல் வேட்டையில் மாணவர்கள் ஈடுபட்டனர். அப்போது ஒரு மாணவன் பூங்காவில் கிடந்த நிஜ சடலத்தைக் கண்டுபிடித்தான்.

பொம்மை எலும்புக்கூட்டைத் தேடப் போய் நிஜ சடலத்தைக் கண்டுபிடித்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 20 ஆண்டுகளாக இதே பயிற்சியை மாணவர்களுக்கு அளித்துவரும் ஆசிரியரும், இதற்கு முன் ஒருபோதும் இவ்வாறு நடந்ததில்லை என்று அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் தெரிவித்தார்.

இது குறித்து விசாரித்த போலீஸôர், பூங்காவில் கிடந்தது 45 வயது மதிக்கத்தக்க மனிதரின் சடலம் என்றும், பிளாட்பார வாசியான அவர் இயற்கையாக மரணம் அடைந்ததாகவும் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தீவிரவாதிகள் தாக்கி 3 பேர் சாவு
Next post சதாமை விசாரிக்கும் கோர்ட் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது: பெண் வழக்கறிஞர் புகார்