நமீதாவை காக்க வைக்காமல் வழி(ந்த)யனுப்பிய பாதுகாப்பு அதிகாரிகள் – கொந்தளித்த விமான பயணிகள்

Read Time:3 Minute, 15 Second

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக வந்த நடிகை நமீதாவை, எந்தவித சோதனையும் செய்யாமல் காத்திருந்த பயணிகளைத் தாண்டி அவரை மட்டும் பாதுகாப்பாக உள்ளே அழைத்துச் சென்றதைப் பார்த்த பயணிகள் கொந்தளித்து விட்டனர். இதையடுத்து அவர்களிடம் பாதுகாப்பு அதிகாரிகள் மன்னிப்பு கேட்டனர். நடிகர், நடிகையர் என்றால் வானத்திலிருந்து வந்து குதித்த தேவர்கள் போல நினைத்துக் கொள்கிறார்கள் பலரும். ஆனால் இந்த செயலால் பாதுகாப்பு அதிகாரிகள் மன்னிப்பு கேட்டகதை சென்னையில் நடந்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சி செல்லும், கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று பகல் 11.50க்கு மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது.

பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்த விமானத்தில் செல்ல டைட் பேன்ட், டீ ஷர்ட், கூலிங் கிளாஸ் அணிந்தபடி கவர்ச்சி நடிகை நமீதா 11 மணிக்கு வந்தார்.

டாக் டாக் என்று நடை போட்டு வந்த நமீதா, அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் ஒருவரை விரல் சொடுக்கி அழைத்து, நான் நடிகை, நானும் வரிசையில் நிற்க வேண்டுமா?’ என்று கேட்டார்.

நமீதாவைப் பார்த்த அந்த வீரர், வரிசையில் நின்ற பயணிகளைத் தாண்டி, நமீதாவை மட்டும் சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர் பெண் அதிகாரிகள் நமீதாவை சோதனையிட்டனர்.

நமீதாவுக்கு கொடுக்கப்பட்ட முதல் மரியாதையைப் பார்த்து, கால் கடுக்க நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த பயணிகள் கொந்தளித்து விட்டனர்.

நாங்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்கிறோம். நடிகை வந்தால் வரிசையில் நிற்காமல் சிறப்பு விருந்தினரை போல் உபசரித்து அனுப்பி வைக்கிறீர்கள். இதற்கு எந்த சட்டத்தில் விதி வகுக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் சண்டை பிடித்தனர்.

இதை எதிர்பாராத பாதுகாப்பு வீரர்கள், தயவு செய்து இதை பெரிதுபடுத்த வேண்டாம். இனிமேல் இப்படி நடக்காது என்று கூறி மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளுக்கு நிதி.. சிறை தண்டனை பெறும் முதல் கனடிய தமிழர்!
Next post சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம்