லிபியாவில் பயங்கர விமான விபத்து-104 பேர் பலி, குழந்தை மட்டும் தப்பியது

Read Time:1 Minute, 9 Second

லிபியா நாட்டில் திரிபோலி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் விழுந்து நொறுங்கி வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த 104 பேர் பலியாயினர். எட்டு வயது சிறுவன் மட்டும் உயிர் தப்பியுள்ளான். லிபிய அரசுக்குச் சொந்தமான அஃப்ரிகியா ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் தென் ஆப்பிரிக்க தலைநகர் ஜோகானஸ்பர்க்கில் இருந்து லிபிய தலைநகர் திரிபோலிக்கு வந்தது. அந் நாட்டு நேரப்படி காலை 6 மணிக்கு திரிபோலி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விழுந்து நொறுங்கியது. விமானிகள், சிப்பந்திகள் 11 பேர் உள்பட அதிலிருந்த 104 பேரும் பலியாயினர். நெதர்லாந்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “லிபியாவில் பயங்கர விமான விபத்து-104 பேர் பலி, குழந்தை மட்டும் தப்பியது

  1. Wednesday, May 12, 2010

    லிபியா விமானம் நொறுங்கி விழுந்தது : 105 பேர் பலி .

    தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்து கொண்டிருந்த லிபியா விமானம் ஒன்று டிரிபோலி விமான நிலையத்தில் இன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 105 பேர் பலியானார்கள்.

    பலியானவர்களில் 94 பேர் பயணிகள் என்றும், 11 பேர் விமான சிப்பந்திகள் என்றும் டிரிபோலி விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்பது குறித்த தகவல் உடனடியாக தெரியவரவில்லை. மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

    this is from ilankainet news,
    so which one is true????

Leave a Reply

Previous post நெடியவன் தலைமையில் நோர்வேயில் இயங்கி வரும் ஜீ.ரீ.எப். அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுவடிவமே
Next post யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் 2ம் லெப்டினன் தர படை உயரதிகாரி சடலமாக மீட்பு