ஈபிடிபியினரால் கொலை அச்சுறுத்தல்.. சாவகச்சேரி நீதவானுக்கு இராணுவ பாதுகாப்பு

Read Time:2 Minute, 22 Second

சாவகச்சேரி நீதவான் கே.பிரபாகரனுக்கு ஈபிடிபியினரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து நீதவானுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இந்த நீதிமன்றத்திற்கு ஏற்கனவே பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது இதற்கு மேலதிகமாக நேற்றுமுதல் படையினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை யாழ்ப்பாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனர்ல மஹிந்த ஹத்துருசிங்க விடுத்துள்ளார். இதனடிப்படையில் சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு படையினர் பாதுகாப்பளிக்கும் அதேநேரம் நீதவான் யாழ்ப்பாணத்திலிருந்து நீதிமன்றத்திற்கு செல்லும் போதும் திரும்பும் போதும் இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் ஈபிடிபியின் தென்மராட்சி அமைப்பாளர் சார்ள்ஸ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேநேரம் இந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபரான யாழ்ப்பாண மாநகரசபையின் பதில்முதல்வர் ரீகன் தலைமறைவாகியுள்ளார் இவரை பாதுகாப்பாக வெளிநாடு ஒன்றிற்கு அனுப்புவதற்கு ஈபிடிபி தலைமைத்துவம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 2000ம் ஆண்டு ஊடகவியலாளர் நிமலராஜனின் கொலையில் சம்பந்தப்பட்ட ஈபிடிபியின் தீவகப்பொறுப்பாளர் நெப்போலியனும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து லண்டனுக்கு சென்று அரசியல் தஞ்சம் கோரியிருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றுகாலை முதல் பொன்சேகா உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்
Next post இந்தோனேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு அரசஅதிபர் சந்திப்பு