பத்திரிகையாளர் திசநாயகத்துக்கு பொது மன்னிப்பு

Read Time:1 Minute, 47 Second

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் பத்திரிகையாளர் திசநாயகத்துக்கு பொது மன்னிப்பு அளிக்க, அதிபர் ராஜபக்ஷே முடிவு செய்துள்ளார்.இலங்கையைச் சேர்ந்த பிரபல தமிழ் பத்திரிகையாளர் ஜெயப்பிரகாஷ் சித்தம்பலம் திசநாயகம். இவர், இலங்கை ராணுவத்துக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பத்திரிகையில் கட்டுரை எழுதியதாக, கடந்த 2008ல் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

திசநாயகம் கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, திசநாயகத்தின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, சமீபத்தில் இவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் கூறுகையில்,’பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் திசநாயகத்துக்கு பொது மன்னிப்பு அளிக்க, அதிபர் ராஜபக்ஷே முடிவு செய்துள்ளார். வழக்கில் இருந்து விரைவில் அவர் விடுவிக்கப்படுவார்’என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்!
Next post வடக்கின் அபிவிருத்திக்கு விஷேட செயலணி -வடமாகாண ஆளுநர் நியமிப்பு