நெல்லியடியில் ஸ்ரூடியோ திறக்கவிருந்தவர் படுகொலை

Read Time:1 Minute, 10 Second

யாழ்ப்பாணம் நெல்லியடியில் படப்பிடிப்பு நிலையமொன்றை இன்று திறக்கவிருந்த இளைஞன் நேற்றிரவு 7மணியளவில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தும்பளை, தம்புருவளையைச் சேர்ந்த மகாலிங்கம் சதீசன் (வயது 25) என்ற இளைஞரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நெல்லியடி பருத்தித்துறை வீதியில் செலிங்கோ காப்புறுதி நிறுவன கிளைக்கு முன்பாக படப்பிடிப்பு நிலையம் ஒன்றை இன்று திறப்பதற்காக கடையொன்றில் சமய நிகழ்ச்சியில் இந்த இளைஞன் நேற்றிரவு ஈடுபட்டிருந்தார். அந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரது பெயரைக் கூறி வெளியே அழைத்ததாகவும் வெளியே வந்தநிலையில் அவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “நெல்லியடியில் ஸ்ரூடியோ திறக்கவிருந்தவர் படுகொலை

  1. வரலாற்றில் எத்தனையோ மன்னர்களையும் தலைவர்களையும் வீரர்களையும் பற்றிப் பெருமையாகப் படிக்கின்றோம். அவர்கள் போரில் கொல்லப்பட்டிருந்தாலும் தன்மதிப்பைக் காக்கத் தற்கொலை புரிந்து கொண்டிருநதாலும் அவர்களை இழிவாக எண்ணுவதில்லை. வீர மரணங்களையும் தாய்நாடு காத்து மடிந்த நிகழ்வுகளையும் வணக்கத்துடனே நினைவு கூர்கின்றோம். தொன்மங்களில் வரும் இராமன், கண்ணன் ஆகியோரையும் தற்கொலை புரிந்து கொண்டவர்கள் என்று இழிவாக எண்ணாமல் வணங்கி மகிழ்கிறோம். எனவே, தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கை ஒரு வேளை கற்பனையாக இருந்தாலும் அவர் வீரமும் நாட்டு மக்கள் விடுதலைக்காக அவர் பாடுபட்ட திறமும் ஈராயிரம் ஆண்டுகளில் தமிழ்மானம் காக்க வாராது வந்த மாமணியாய் விளங்கும் செம்மாப்பும் என்றென்றும் நினைவில் கொண்டு போற்றத்தக்கனவே! கொத்துக் குண்டுகளைப்பயன்படுத்தித் தம் நாட்டு மக்கள் எனச் சொல்லிக் கொண்டே வஞ்சக முறையில் இனப் படுகொலை செய்த சிங்கள அரசு வெற்றி விழா கொண்டாடுவது களங்கமே! விரைவில் தமிழ் ஈழ வெற்றி விழா கொண்டாடும் காலம் வரும்; அப்பொழுது இக்கறை துடைக்கப்படும். தமிழ் ஈழம் வெல்க! தாய்மண் காக்க கொத்துக் குண்டுகளைப்பயன்படுத்தித் தம் நாட்டு மக்கள் எனச் சொல்லிக் கொண்டே வஞ்சக முறையில் இனப் படுகொலை செய்த சிங்கள அரசு வெற்றி விழா கொண்டாடுவது களங்கமே! விரைவில் தமிழ் ஈழ வெற்றி விழா கொண்டாடும் காலம் வரும்; அப்பொழுது இக்கறை துடைக்கப்படும். உலகெங்கிலும் உள்ளவர்கள் இதே நாளை தாய்மண் விடுதலை ஈகிகள் நாள் எனக் கொண்டாட வேண்டும். தமிழ் ஈழம் வெல்க! தாய்மண் காக்க
    புலிகளோ பிரபாகரனோ அழிக்கப்பட்டது இலங்கைஅரசுக்குக் கிடைத்த வெற்றியல்ல. தமிழ்மக்களுக்கு என்று சமவுரிமை அளிக்கப்படுகின்றதோ அன்றுதான் இலங்கைஅரசு வெற்றியைக் கொண்டாட முடியும். தற்போது பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. அவ்வளவே. இதற்கெல்லாம் வெற்றிவிழாக் கொண்டாடுவது தேவையற்ற இனமுரண்பாடுகளையே வளர்க்கும். ஏற்கனவே குற்றப்பின்னணி உடையவர்களை தமிழ் அமைச்சர்களாக்கி தமிழ்மக்களின் முகத்தில் கரிபூசியாகிவிட்டது. புலிகளால் தமிழ்த்தலைவர்கள் அழிக்கப்பட்டார்கள். ஆனால் கற்றறிந்த தமிழ் அறிஞர்களை நியமன எம்பியாக்கி அவர்களிற்கு அமைச்சர் பதவி வழங்கி தமிழர்களைக் கைளரவப்படுத்தியருக்கலாம். இதுவே காலங்காலமாக சிங்கள அரசுகளின் நடைமுறை. திருச்செல்வம், குமாரசூரியர், லக்ஸ்மன் கதிர்காமர் போன்ற தமிழ் கல்விமான்கள் நியமன எம்பிகளாகி அமைச்சர்களாக இருந்தனர். தற்போது ஈபிடிபியினர் போலவே கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சமூகசேவைகள் செய்த குற்றப்பின்னணி உடையவர்களை அமைச்சர்களாக்கி, இவர்கள்தான் தமிழர்களின் தலைவர்கள் என்று உலகிற்குக் காட்டப்படுகின்றது. இதில் வெற்றிவிழா வேறு…இந்த வெற்றி உங்களுக்கு சொந்தமானது இல்லை… இந்தியாவுக்கு சொந்தமானது… அதுவும் சோனியாவுக்கும், அதன் கட்சி காங்கிரஸ்க்கும் சொந்தமானது… ரொம்பவும் பீற்றி கொள்ளாதே… “இதை கொண்டாட இந்திய துணை இல்லாமல் வெற்றி பெற்றுக்கவேண்டும்…” ஆனால் உங்களால் முடியாது…அதுக்கு ஏன் இந்த கொண்டாட்டம்…ஒரு பொய்யை பல முறை கூறினால் அது உண்மையாகிவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மை வெளிவரும் போது உலக வரலாற்றில் மிகவும் மோசடியாக செய்யப்பட்ட பொய் இதுவாகத்தான் இருக்கும். உலகளவில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும். காயம் பட்ட புலி சினத்துடன் இருந்தாலும் சிறிது காலம் மறைந்துதான் இருக்கும் நிர்ப்பந்தம். சீற்றத்துடன் வெளிப்படும் காலம் விரைவில் வரும்..பிரபாகரன் உயிரோடு வந்தால் “எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் உடலை பார்க்க வில்லை. உடலை கண்டுபிடித்தது பொன்சேகாதான்” என்று ராஜபக்சே சகோதரர்கள் பொன்சேகாவின் மீது பழி போட்டு தப்பி விடுவார்கள். பொன்சேகா திருப்பி இவர்கள் மீது குற்றம் சொல்வான். கடைசியில் இருவரும் சேர்ந்து இந்தியாவை கேனையானாக்கி விட்டார்கள்.

Leave a Reply

Previous post எதிர்வரும் காலங்களில் கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் -கல்வியமைச்சர் தெரிவிப்பு
Next post சாவகச்சேரி வர்த்தகர் மகன் படுகொலை, சந்தேகநபர் கைது